Zanai Bhosle: ஹீரோயினாக அறிமுகமாகும் பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி: எந்தப் படம் தெரியுமா?
Zanai Bhosle: புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்
சத்ரபதி சிவாஜியின் சுயசரிதையில் சிவாஜியின் மனைவியாக நடிக்கிறார் ஜனாய் போஸ்லே (Zanai Bhosle).
ஆஷா போஸ்லே
பாலிவுட்டின் மூத்த பாடகிகளில் ஒருவர் ஆஷா போஸ்லே. ஆஷாஜி என இசைப் பிரியர்களால் மிகவும் செல்லமாக அழைக்கப்படும் போஸ்லேவுக்கு இன்றும் அந்த இனிய குரலில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. 1987ஆம் ஆண்டு வெளியான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் "செண்பகமே…செண்பகமே…’ எனும் முதல் பாடலிலேயே மிகவும் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து ‘ஓ…பட்டர்பிளை…’, ‘எங்க ஊரு காதலைப் பத்தி…’,‘எங்கெங்கே…எங்கெங்கே...’, ‘வெண்ணிலா…’, ‘ நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’,‘செப்டம்பர் மாதம்…’, ‘கொஞ்ச நேரம்… கொஞ்ச நேரம்...’, என அவர் தமிழ் சினிமாவில் பாடிய அதனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்.
இன்றும் நம் அனைவரின் காதுகளிலும் இனிமையை ஒலிக்கும் அந்தக் குரலுக்கு சொந்தக்காரரான ஆஷா போஸ்லேவுக்கு இன்றைய தலைமுறைவரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தி, தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ஆஷா போஸ்லே சாதனை படைத்துள்ளார்.
தற்போது துபாயில் சொந்தமாக பாரம்பரியமான உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் ஆஷா போஸ்லே. இந்த ரெஸ்டாரெண்டிற்கு ஆஷாஸ் ரெஸ்டாரெண்ட் என்று பெயர் வைத்துள்ளார். ஆஷா போஸ்லேவின் பேத்தியான ஜனாய் போஸ்லேவும் ஒரு பாடகி. இந்நிலையில், இவர் ஹீரோயினாகவும் விரைவில் அறிமுகமாக உள்ளார்.
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு
View this post on Instagram
மராத்திய மன்னரான சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக இருக்கிறது. இந்தப் படத்தை சந்தீப் சிங் இயக்குகிறார். இந்தப் படத்தில் சிவாஜியின் மனைவியான ராணி சாய் போன்ஸ்லேவாக ஜனாய் போஸ்லே நடிக்க இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்டு மொத்தம் 5 மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
இந்த தகவலை பாடகி ஆஷா போஸ்லே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிந்துள்ளார். “ எனது பேத்தி திரையில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த நடிகையாக வருவார் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Meera Chopra: 40 வயதில் காதலரை மணமுடித்த மருதமலை நாயகி! நிலாவாக ஜொலிக்கும் மீராவின் க்யூட் போட்டோஸ்!