VTK: சிம்புவிற்கு 90 லட்சம்.. கெளதம் மேனனுக்கு 2 லட்சமா? என்ன விஷயம் ப்ரோ..
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவிற்கு அளித்த சொகுசு கார் மற்றும் கெளதம் மேனனுக்கு பரிசளித்த ராயல் என்பீல்டு பைக்கின் ஸ்பெசிபிகேஷன்ஸ் இதோ !
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சக்சஸ் பார்ட்டி ஒன்று வைத்துள்ளார். அந்த பார்ட்டியின் போது நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
நியூ டொயோட்டா வெல்ஃபயர்:
டொயோட்டா நிறுவனத்தை சேர்ந்த நியூ டொயோட்டா வெல்ஃபயர் கார் தான் அது.அந்த காரின் எக்ஸ். ஷோரூம் மதிப்பு 92.60 லட்சம் ஆகும். ஏழு பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட இந்த கார் நாலு சிலிண்டர்களை உடையது. இந்த காரின் நீளம் மற்றும் அகலம் 4935* 1850 மில்லி மீட்டர் ஆகும். மேலும் இந்த கார் 3000 மில்லி மீட்டர் வீல் பேஸை கொண்டதாகும். இது தானாக சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய திறன் வாய்ந்தது. இதனால் இந்த மாடலில் உள்ள மற்ற கார்களை விட காரில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இது குறைந்த கார்பன்டை ஆக்சைடு அளவையே உபயோகிக்கிறது. மேலும் இந்த கார் 117 bhp 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜின் தவிர முன்பக்க மற்றும் பின்பக்க அச்சுகள் ஒவ்வொன்றிலும் ஒரு மின்சார மோட்டார் உள்ளது. லிட்டருக்கு 16.35 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியதாகும்.
சிக்னல் மார்ஸ் கிரே எடிசன் ராயல் என்ஃபீல்டு:
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குநர் கௌதம் மேனனுக்கு சிக்னல் மார்ஸ் கிரே எடிசன் ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 2.07 லட்சம் ஆகும். இந்த பைக் 349 cc இன்ஜின் கொண்டது. மேலும் 20.2 bhp பவர் கொண்டது இந்த நவீன ராயல் என்ஃபீல்டு.
வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றி !
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து படக்குழுவினர்,
Producer Dr @IshariKGanesh Presented A brand new luxury car to @SilambarasanTR_ & a Royal Enfield bike to dir @menongautham celebrating the success of #VendhuThanidhathuKaadu at #VTKSuccessMeet@arrahman @VelsFilmIntl @RedGiantMovies_ @Udhaystalin @DoneChannel1 pic.twitter.com/h7KX5qwX9s
— Vels Film International (@VelsFilmIntl) September 25, 2022
"கருப்பு நிற புதிய சொகுசு காரின் புகைப்படத்தையும் ராயல் என்ஃபீல்டு பைக் உடன் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனனும் இருக்கின்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, வெற்றி விழாவின் போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவிற்கு சொகுசு காரையும் கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கையும் பரிசளித்தார்" என சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.