Manobala: "மக்களை வென்ற மனோபாலா" நாளை மறுநாள் நினைவேந்தல் - தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு..!
ஊர்க்காவலன், பிள்ளை நிலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள மனோபாலா, 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் மனோபாலாவின் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் மே 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த மனோபாலா:
பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான நடிகர் மனோபாலா கடந்த மே 3ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது அவரது ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. தமிழில் ஊர்க்காவலன், பிள்ளை நிலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள மனோபாலா, 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் உதவியாளராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த மனோபாலா, தன் ஒல்லியான தனித்துவ தோற்றத்தையும், தனித்துவமான குரலையும் ப்ளஸ்ஸாக்கி பலரையும் சிரிக்க வைத்தார்.
நினைவேந்தல்:
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த மனோபால இறுதியாக விஜய்யின் லியோ படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மனோபாலா, கடந்த மே 3ஆம் தேதி காலமானது அவரது ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது. மனோபாலாவின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அவரது ரசிகர்கள் எனப் பலரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், மனோபாலாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Farhana Movie Review: ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்…! எப்படி இருக்கு ஃபர்ஹானா..?
நாளை மறுநாள் மே 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு தி.நகரில் உள்ள பி.டி தியாகராஜா ஹால் பகுதியில் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனோபாலாவுக்கு நெருக்கமான மற்றும் அவர் மீது மதிப்பு கொண்ட திரை நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடல்நலக்குறைவால் அவதி:
முன்னதாக உடல்நலக்குறைவால் அவதிப்படும் மனோபாலாவுடன் அவரது மகன் உரையாடி பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலானது. மனோபாலாவின் இறுதி தருணங்கள் இடம்பெற்றிருந்த இந்த வீடியோ காண்போரைக் கண்கலங்க வைக்கும் வகையில் இருந்தது.
ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து 20 படங்களை இயக்கியுள்ள மனோபாலா, கே.எஸ்.ரவிக்குமாரின் வற்புறுத்தலின் காரணமாக ‘நட்புக்காக’ படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, மாதவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து ரசிகர்களிடன் வரவேற்பை பெற்ற மனோபாலா, தன் 69ஆவது வயதில் உயிரிழந்தார்.
மேலும் படிக்க: Lal Salaam Memes: சூப்பர்ஸ்டார் கெட்டப்புக்கு இப்படி ஒரு நிலைமையா? மொய்தீன் பாயை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!