Shruti Haasan: எனக்கு அதிகமா புடவை பரிசா கொடுத்தது யார் தெரியுமா? மனம் திறந்த ஸ்ருதிஹாசன்
"ஒரு பெண்ணுக்கு பொட்டு வைப்பது எப்படி அழகோ அப்படி தமிழ்நாட்டுக்கு பட்டுப்புடவை. இது நம் மாநிலத்தைப் பற்றிய அழகான விஷயம். சிறந்த கைவினைத் திறன்" - ஸ்ருதி ஹாசன்
நடிகர் கமல்ஹாசனுடன் யாரும் போட்டிபோட முடியாது என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனியார் பட்டுப்புடவை கடை ஒன்றைத் திறந்து வைக்க ஸ்ருதி ஹாசன் கோவைக்கு வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ருதி ஹாசன் பேசியதாவது:
கருப்பு ட்ரெஸ், பாரம்பரிய புடவை ரெண்டும் பிடிக்கும்
இங்கு புடவைகள் ரொம்ப அழகா இருக்கு. பட்டுப்புடவைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். பாரம்பரிய உடைகள் பொதுவாக அணிய மாட்டேன். ஆனால் அணிந்தால் பட்டுப்புடவை தான் பிடிக்கும். இங்கு புடவைகள் பார்ப்பதற்கு ரிச் லுக் தருவதுடன் அணிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் உள்ளன.
கோவை மக்களுக்கு வணக்கம். எனக்கு இங்க வர ரொம்ப பிடிக்கும். ஒரு பெண்ணுக்கு பொட்டு வைப்பது எப்படி அழகோ அப்படி தமிழ்நாட்டுக்கு பட்டுப்புடவை. இது நம் மாநிலத்தைப் பற்றிய அழகான விஷயம். சிறந்த கைவினைத் திறன். ஒரு புடவை நெய்ய 4 மாதங்கள் தேவைப்படுகிறது. இது ஒரு கலை. இதைப் பார்ப்பதற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
அப்பா கமல்ஹாசனின் பரிசு
நான் பொதுவாக கருப்பு உடை தான் அணிவேன். இல்ல மாடர்ன் உடை தான் அணிவேன். ஆனால் நான் விரும்பி பாரம்பரிய புடவை அணிந்தால் பாசிட்டிவ் உணர்வு கிடைக்கும். என்னிடம் புடவை கலெக்ஷன் அதிகம் இல்லை. அதிகமாக அப்பா தான் கிஃப்ட் பண்ணிருப்பாரு. அவர் ரொம்ப ஆசைப்படுவார். ஆனால் மஞ்சள், வெள்ளை கலர்களில் பட்டுப்புடவை எனக்கு கொடுப்பார்.
நான் நடிக்க வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனக்கு இப்போது ஒரு நல்ல கதை தேவைப்படுகிறது. என்ன சுத்தி இருக்கவங்க பாசிட்டிவ்வாக ஃபீல் செய்யணும். பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட்னு நான் பார்க்கல” என்றார்.
அப்பாவுடன் போட்டி போட முடியாது
தொடர்ந்து அப்பாவை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு “அய்யய்யோ அப்பாவை வைச்சு நோ..” என மறுப்பு தெரிவித்து தொடர்ந்து பேசிய ஸ்ருதி, “நான் தமிழ் பெண். இப்போது ரீமேக் எல்லாம் இல்லாமல் நேரடியாக ஓடிடி அல்லது பான் இந்திய படமாக தமிழ் படங்கள் அங்கும் வெளியாகின்றன. ரீமேக்கை வைத்து அவற்றைக் கெடுக்க முடியாது என்பது எனக்கு சந்தோஷமாக உள்ளது.
நான் என் சாதனைகளை நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்குகிறேன். அப்பாவுடன் யாரும் போட்டி போட முடியாது. நான் என் வேலையைப் பார்க்கிறேன். அத்துடன் ஹேப்பி.
ஹாலிவுட் படத்தில் நான் இந்தியப் பெண்ணாக தற்போது நடித்துள்ளேன். அந்தப் படத்தில் தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குநர் என எல்லாரும் பெண்கள். என் வாழ்க்கையில் முதன்முறையாக இப்படி ஒரு பட டீமுடன் வேலை பார்த்துள்ளேன். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் கலந்துகொண்டு இருக்கு. இது எனக்கு பெருமையா இருக்கு.
இந்திய சினிமா துறைக்கும் ஹாலிவுட் சினிமா துறைக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசமில்லை. மொழி மட்டுமே மாறுகிறது” எனப் பேசினார்.