Shoba Chandrasekar on Ajith : “மைக்ல போய் இதை சொல்லணுமா அஜித்” - செல்லமாக கேட்ட விஜயின் அம்மா! இவங்க உறவு இப்படிப்பட்டதா...?
எனக்கு விஜய் எப்படியோ அதே போல தான் அஜித் சாரும். நான் அவர்கள் இருவரையும் என்றும் பிரித்து பார்த்ததே இல்லை. இரெண்டு பேருமே எனக்கு மகன்கள் தான் - ஷோபா சந்திரசேகர்
![Shoba Chandrasekar on Ajith : “மைக்ல போய் இதை சொல்லணுமா அஜித்” - செல்லமாக கேட்ட விஜயின் அம்மா! இவங்க உறவு இப்படிப்பட்டதா...? Shoba Chandrasekar shares her bonding with Ajith and his family Shoba Chandrasekar on Ajith : “மைக்ல போய் இதை சொல்லணுமா அஜித்” - செல்லமாக கேட்ட விஜயின் அம்மா! இவங்க உறவு இப்படிப்பட்டதா...?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/921a4d3e274e6c4de1beae81d792c36c1673420011189224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒட்டுமொத்த திரையுலகமே ரசிகர்களுடன் சேர்ந்து மிகுந்த ஆவலுடன் பல நாட்களாக எதிர்பார்த்த அந்த நாள் வாரிசு - துணிவு படத்தின் ரிலீஸ் தேதி. அந்த வகையில் அஜித் மற்றும் விஜய் இருவரின் படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் மகனின் படத்தை பார்ப்பதற்காக திரையரங்கத்திற்கு வந்த வீடியோ நேற்று மிகவும் வைரலானது.
அஜித் - விஜய் பாண்டிங் :
படத்தை பார்த்த ஷோபா சந்திரசேகருடன் நடைபெற்ற நேர்காணலில் விஜய் - அஜித் இருவரின் உறவு குறித்து பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில் " எனக்கு விஜய் எப்படியோ அதே போல தான் அஜித் சாரும். நான் அவர்கள் இருவரையும் என்றும் பிரித்து பார்த்ததே இல்லை. இரெண்டு பேருமே எனக்கு மகன்கள் தான். அவர்கள் இருவருமே என்றும் அன்புடன் நட்புடன் தான் இருக்கிறார்கள். இரண்டு குடும்பமும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். ஷாலினியும் எங்கள் குடும்பத்தில் ஒருவரை போல தான். 'வாரிசு' - 'துணிவு' இரண்டு படங்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்று தான் நான் பிராத்தனை செய்து கொண்டேன். இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் வெற்றி பெற்றால் அது இந்த திரையுலகத்திற்கு நல்லது தானே" என்றார்.
மேடையில் அஜித் கொடுத்த ஷாக் :
"குஷி திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றபோது அஜித் சார் அதில் கலந்து கொண்டார். அங்கு மேடையில் பேசிய அஜித் சார் 'நானும் விஜய்யும் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் இணைந்து நடித்த போது அம்மா விஜய்க்கு லஞ்ச் கொடுத்து விடும் போது எனக்கும் சேர்த்து கொடுத்து விடுவார்கள் என மைக்கிலேயே ஓப்பனாக சொல்லிவிட்டார். அது எனக்கு சொல்லமுடியாத ஒரு சந்தோஷமாக இருந்தது. நான் அஜித் சாரிடம் ரொம்ப நன்றி ஆனால் நீங்க இதை போய் மைக்ல சொல்லியிருக்க வேண்டாம் என்றேன். அதற்கு அஜித் சார் சொன்னாரு நான் என்னைக்குமே அத மறக்க மாட்டேன் அம்மா. நீங்க அவ்வளவு அன்போட எனக்கும் சேர்த்து லஞ்ச் கொடுப்பீங்க" என்றார்
அஜித் சார் கிட்ட என்ன பிடிக்கும் :
"அஜித் சாரோட வாய்ஸ், கலர், ஹேர் ஸ்டைல் எல்லாம் ரொம்ப பிடிக்கும் அதற்கும் மேல அவர் நடித்த வாலி படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரோட கல்யாணத்துக்கு எங்களை வீட்டுக்கு வந்து நேரடியாக அழைப்பு வைத்து விட்டு நீங்கள் கண்டிப்பாக வந்து எங்களை வாழ்த்த வேண்டும் என சொல்லிவிட்டு போனார். நான் வாக்கிங் செய்ய போகும் இடத்திற்கு தான் அஜித் சார் குடும்பமும் வரும். பல முறை அஜித் சார் கூட அங்கு வாக்கிங் செய்ய வந்து இருக்கிறார். நாங்கள் அங்கு அடிக்கடி சந்தித்து கொள்வோம்" என்றார் ஷோபா சந்திரசேகர்.
கொஞ்சம் எமோஷனல் பர்சன் :
அம்மா - பிள்ளை சென்டிமென்ட் தான் வாரிசு திரைப்படம் என்பது பார்க்கும்போதே தெரியுது. விஜய்யை பொறுத்த வரைக்கும் அம்மா செண்டிமெண்ட் அதிகம் தானே என்று கேட்டதற்கு ஷோபா கூறுகையில் "நீங்கள் படத்தையும் ரியல் லைஃப்பையும் சேர்த்து பார்க்கும் போது உங்களுக்கு அப்படி தெரியுது. விஜய் அம்மா செண்டிமெண்ட் மட்டும் இல்ல தங்கச்சி சென்டிமென்ட் வந்தா கூட கலங்கிவிடுவார். அவருக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் அம்மா - தங்கச்சி" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)