மேலும் அறிய

Actor Shivarajkumar :ரசிகர்களின் தொந்தரவில் பெருமை அடைகிறேன்.. நடிகர் சிவராஜ்குமார் பெருமிதம்...

ரசிகர்களின் தொந்தரவு கர்வத்தையும் பெருமையையும் அளிப்பதாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவராஜ்குமார் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஆனந்த் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயிலர் படத்தில் இவரது ஸ்டைல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த பின் கன்னட ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் சிவராஜ்குமாரை கொண்டாடி வருகின்றனர்.

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் என்ற அடையாளம் இருந்தபோதிலும் தன்னுடைய சிறப்பான திறமையால் இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் சிவாண்ணா என்று ரசிகர்களால் அன்பாக கொண்டாடப்படுபவர். கன்னடத்தில் மட்டுமில்லாமல் தற்போது தமிழ், மலையாளப் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.     

தமிழில்  பேட்டிகளை கொடுத்துவரும் சிவராஜ்குமார், தான் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வருவதாகவும் திடீரென சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிய கடையில் சாப்பிடுவேன் என்றும் கூறியுள்ளார். அப்படி சாப்பிடும்போது ரசிகர்களின் தொந்தரவு இருக்கும் என்று கூறியுள்ள அவர், ஆனால் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்களின்  தொந்தரவில் பெருமை, திமிர், சந்தோஷம் இவற்றைத்தான் உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.   தமிழில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் பாடி லேங்குவேஜில் மாஸ் காட்டி  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஜெயிலர் படத்தில் இவரது மாஸான நடிப்பு கன்னட ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் டிஷ்யூ பேப்பரை ரம்யா கிருஷ்ணனிடம் தள்ளும் ஒரு காட்சியில் அதிகமான கைத்தட்டல்களை பெற்றுள்ளார் சிவராஜ்குமார். 

தொடர்ந்து தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அதிலும் மிரட்டலான சிவராஜ்குமாரை பார்க்க முடிந்தது. குதிரையில் இவர் வரும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் மலையாளத்திலும் பிரித்விராஜ் இயக்கத்தில் டைசன் படத்தில் நடித்து வருகிறார். சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில்  உருவாகி உள்ள கோஸ்ட் திரைப்படம்  வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  விஜய்யின் லியோ படமும் இதே நாளில் வெளியாகவுள்ளது . கோஸ்ட் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு உள்ள நிலையில், லியோவுடன் இந்தப் படம் மோதவுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க

Delhi law: பறிக்கப்பட்ட டெல்லி அரசின் அதிகாரம்.. சட்டப்போராட்டத்தை கைவிடாத அரவிந்த் கெஜ்ரிவால்.. காத்திருக்கும் அடுத்த அதிரடி

Jailer Box Office Collection: அம்மாடியோவ்.. 525 கோடி ரூபாய்.. எல்லா ரெக்கார்டுகளையும் விரட்டிய ஜெயிலர்.. வசூலில் சந்திரயான் பட்ஜெட்டை நெருங்கி அசத்தல்

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget