மேலும் அறிய

Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!

’மேலோட்டமான பொழுதுபோக்கை மட்டுமே கொண்டாடுவது அறிவுசார் பரிணாம வளர்ச்சிக்கு மாபெரும் அச்சுறுத்தல்’

பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா துராடியின்  இன்ஸ்டாகிராம் பதிவு சின்னத்திரை ரசிகர்களிடையே பரபரப்பான பேசுபொருளாக மாறியிருக்கிறது. பழம்பெரும் ஊடக நிறுவனம் ஒன்று சமீபத்தில் டிஜிட்டல் விருதுகள் தருவதாக அறிவித்து, அதற்கான வாக்கெடுப்பைத் தொடங்கியது. இதில் விருதுத் தேர்வு குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.  படைப்பாற்றலைக் கொண்டாடும் விதமாக வழங்கப்படுவதாக சொல்லப்பட்ட இந்த விருது, உண்மையான அறிவுசார் உழைப்பைப் புறக்கணித்துவிட்டு, வெறும் டிரெண்டுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். 

விருது தேர்வு குறித்து சரண்யா துராடி அதிருப்தி

இது தொடர்பாக சரண்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், இன்று நாம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசுவோம். சமீபத்தில் 'விகடன் டிஜிட்டல் விருதுகள்' அறிவிக்கப்பட்டன; அதில் Best Celebrity Creator பிரிவில் நான் பரிந்துரைக்கப்பட்டிருந்தேன். முதலில், விருது வென்றவர்களுக்கு என் வாழ்த்துகள். ஆனால், என் மனதில் உள்ளதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்; ஏனென்றால், உங்களிடம் உண்மையாக இருக்க வேண்டியது என் கடமை.

நான் வளர்ந்த சூழலில், விகடன் என்பது எங்கள் வீடுகளில் வெறும் ஒரு இதழாக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு மனம் விரும்பும் நிறுவனமாகவே திகழ்ந்தது. நாங்கள் சிந்திக்கும் முறை, வாசிப்புப் பழக்கம் மற்றும் உலகத்தைப் பார்க்கும் பார்வை ஆகியவற்றை அதுவே வடிவமைத்தது. அந்த ஆழமான மரியாதையின் காரணமாக, அவர்களிடமிருந்து அங்கீகாரம் பெறுவது எனக்கு ஒரு  உன்னதமான விஷயமாக இருந்தது.

டிரெண்டுகளுக்கு மட்டுமே முக்கியத்துவமா?

அந்தப் பிரிவையும் அதன் இறுதி முடிவுகளையும் பார்த்தபோது, ​​ஒரு கனமான உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அங்கே எதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது என்று பாருங்கள்: 'Get Ready With Me' வீடியோக்கள், makeup vlogs ,  ஷாப்பிங் மற்றும் உணவகச் சுற்றுப்பயணங்கள் எனத் திரும்பத் திரும்ப வரும் அதே விஷயங்கள்; சில சமயங்களில் இணையத்தில் வைரலாகும்  மேலோட்டமான டிரெண்டுகளை  மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.

இணையத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு இடம் இருக்கிறது, அது உண்மைதான். ஆனால், எனது பணியும், நாம் இணைந்து உருவாக்கியுள்ள இந்தச் சேனலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு தளத்தைச் சேர்ந்தவை. புவிசார் அரசியல், வரலாறு, மொழி, கலாச்சாரம், இலக்கியம் தொடங்கி முக்கியமான சமூகப் பிரச்சினைகள், அரசியல், ஆன்மீகம் மற்றும் தமிழ் மெய்யியல் தத்துவம் வரை பலதரப்பட்ட விஷயங்களை நாம் ஆராய்ந்து வழங்குகிறோம். இந்த விஷயங்களை உயிர்ப்புடன் கொண்டுவர, நான் ஒவ்வொரு வீடியோவிற்கும் பல புத்தகங்களைப் படிக்கிறேன்; வாசிப்பதற்கும், எழுதுவதற்கும், குறிப்புகள் எடுப்பதற்கும் எண்ணற்ற மணிநேரங்களைச் செலவிடுகிறேன். சீரியல் படப்பிடிப்பிற்குச் செல்லும்போதும் கூட எனது ஆராய்ச்சிக்கான குறிப்புகளை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். ஒவ்வொரு ஃப்ரேமிலும் எனது நேரத்தையும், உழைப்பையும், சிந்தனையையும் முழுமையாகச் செலுத்துகிறேன்.

புத்தகங்களை மூடிவிட்டு மேக்கப் வீடியோ போட வேண்டுமா?

படைப்பாற்றலைக் கொண்டாடும் ஒரு விருது, இத்தகைய உண்மையான அறிவுசார் உழைப்பைப் புறக்கணித்துவிட்டு, வெறும் டிரெண்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, ​​அது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. "பணியின் ஆழம் அல்லது உள்ளடக்கம் இனி முக்கியமில்லையா?" என்ற கேள்வியை அது எழுப்புகிறது.

'வெற்றியாளர்' என்ற அந்தச் சட்டகத்திற்குள் பொருந்த வேண்டுமானால், புத்தகங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இனி மேக்கப் முறைகள் மற்றும் ஹோம் டூர் வகை வீடியோக்களைப் பதிவிட வேண்டுமோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது. ஆனால், அது நான் அல்ல என்பதும், அதற்காக நீங்கள் என்னுடன் இணையவில்லை என்பதும் எனக்கு ஆழமாகத் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார் சரண்யா.

அறிவுசார் வீடியோக்கள் vs பொழுதுபோக்கு வீடியோக்கள்!

அவரது பதிவில் பின்னூட்டமிட்டுள்ள பலரும், நாங்கள் உங்கள் உழைப்பை மதிக்கிறோம். நீங்கள் மற்ற நட்சத்திரங்களைப்போல பொதுபுத்தி சட்டகத்துக்குள் அடங்கும் ஊடக கவர்ச்சி வீடியோக்களுக்கு செல்லாதீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதில் தெளிவாவது ஒரே கருத்துதான். விகடன் அறிவுசார் வீடியோக்களை கடுமையாக உழைத்து உருவாக்குபவர்களையும், Make-Up Tour, Home Tour வகையறா பொழுதுபோக்கு Trend-கவர்ச்சி வீடியோக்களை பதிவிடுபவர்களையும் ஒரே பிரிவில் வைத்துத் தேர்வு செய்வதே பிரச்சனைக்கான காரணம். மக்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் - மக்கள் எதைப் பார்ப்பது அவசியம் என்ற இரண்டும் ஒரே தராசில் வைக்க முடியாத இரு வேறு துருவங்கள். மேலோட்டமான பொழுதுபோக்கை மட்டுமே கொண்டாடுவது அறிவுசார் பரிணாம வளர்ச்சிக்கு மாபெரும் அச்சுறுத்தல்

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Embed widget