Shanthanu Bhagyaraj: ’உங்க நடிப்பு சூப்பரா இருந்துச்சு’ .. சாந்தனுவை பாராட்டி தள்ளிய ஃபகத் ஃபாசில்..!
ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்களைப் பார்த்திருக்கிறோம் ஒரே நாளில் திருமண நாளைக் கொண்டாடும் ஜோடிகளை பார்த்திருக்கிறோமா....இதுதான் அந்த ஜோடி
நடிகர் ஃபகத் ஃபாசில் நஸ்ரியா மற்றும் சாந்தனு கீர்த்தி தம்பதியினர் ஒரே நாளில் வந்த தங்களது திருமண நாளை சேர்ந்து கொண்டாடி இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டிருந்த நிலையில் நடிகர் ஃபகத் ஃபாசிலுடன் பேசிய தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் நடிகர் சானதனு.
நஸ்ரியா ஃபகத் ஃபாசில்
கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியா மற்றும் நடிகர் ஃபகத் ஃபாசில் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது. அதே தேதியில் 2015 ஆம் ஆண்டு நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி இருவரின் திருமணமும் நிகழ்ந்தது. சமீபத்தில் ஒரே நாளில் வந்த இந்த இரண்டு தம்பதிகளின் திருமண நாளை ஒரே நாளில் கொண்டாடி இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முழு காரணம் இயக்குநர் ஏ.எல் விஜய் என்பது தெரிய வந்தது.
நன்றி சொன்ன சாந்தனு
இதுகுறித்து நடிகர் சாந்தனு தெரிவித்த போது “ எங்கள் இருவரின் திருமண நாளும் ஒரே நாளில் வருவதை இயக்குநர் விஜய் தெரிந்து வைத்திருந்தார். அதனால் அவர் எனக்கு அழைத்து இருவரின் திருமண நாளையும் சேர்ந்து கொண்டாடலாம் என்று சொன்னார். அதே போல் ஃபகத் மற்றும் நஸ்ரியாவிற்கும் கால் செய்து அவர்களிடமும் பேசியிருந்தார். அவரால் தான் இந்த அழகான தருணம் சாத்தியமானது அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் “ என்று கூறினார் நடிகர் சாந்தனு.
View this post on Instagram
ஃபகத் என்னை பாராட்டினார்
“ பெங்களூரில் இருந்து படப்பிடிப்பு முடித்து வந்திருந்தார் ஃபகத் ஃபாசில். அவரது தந்தை ஃபாசில் இயக்கியப் படத்தில் என்னுடைய அம்மா நடித்திருந்தார். அதை ஃபகத் நியாபகம் வைத்திருந்தார். அதே மாதிரி என் அப்பா இந்தியில் இயக்கியப் படங்களைப் பற்றியும் பேசினார். தன்னுடைய சினிமா அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். பிறகு பாவக் கதையில் நான் நடித்திருந்த தங்கம் கதாபாத்திரத்தைப் பற்றி பேசினார். அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் நான் நடித்திருந்ததாக என்னை பாராட்டினார். நடிப்பு அரக்கன் என்று சொல்லப்படும் ஃபகத் ஃபாசில் என்னை பாராட்டியதும் அதற்கு காரணமாக இருந்த இயக்குநர் விஜய்க்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் “ என்று நடிகர் சாந்தனு தெரிவித்தார்.