Ranbir Kapoor: சோஷியல் மீடியாவில் ஏன் இல்லை.. இதுதான் ரீசன்.. உண்மையை உடைத்த ரன்பீர் கபூர்..!
தான் ஏன் சோஷியல் மீடியாவில் இல்லை என்பதற்கு பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் பதில் அளித்துள்ளார்.
![Ranbir Kapoor: சோஷியல் மீடியாவில் ஏன் இல்லை.. இதுதான் ரீசன்.. உண்மையை உடைத்த ரன்பீர் கபூர்..! Shamshera Ranbir Kapoor explains why he maintains distance from social media during Shamshera promotion Ranbir Kapoor: சோஷியல் மீடியாவில் ஏன் இல்லை.. இதுதான் ரீசன்.. உண்மையை உடைத்த ரன்பீர் கபூர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/14/fd43b986546541fbf9d2bd537d37c3041657802463_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரையில் இருக்கும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். இதன் வாயிலாக அவர்கள் தங்களை பிரபலப்படுத்திக்கொள்வதோடு, அதை வைத்து வியாபாரமும் செய்கின்றனர். ஆனால் பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் எந்த சமூகவலைதளங்களிலும் இல்லை.
இந்த நிலையில் அடுத்ததாக வெளியாக இருக்கும் 'சம்சேரா’ படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த ரன்பீர், “ வெறொரு தளத்தில் எனது உழைப்பைக்கொடுத்து எனது தனித்தன்மையை காட்ட நான் விரும்பவில்லை. நான் ஒரு திரைப்பட நடிகர்.. அப்படியே இருந்து விட்டு போக விரும்புகிறேன் என்றார்.
அவர கருத்தை ஆமோதித்த வாணி கபூர், உங்களுக்கும், உங்களின் அன்பிற்குரியவர்களுக்கும் மட்டுமே தெரியவேண்டிய உங்களின் ஒரு பகுதியை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது” என்று கூறினார்.
View this post on Instagram
ரன்பீர் கபூர், வாணி கபூர், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் 'சம்சேரா’. பாலிவுட் இயக்குநர் கரண் மல்கோத்ரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி வெளியானது.
இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப்படம் வருகிற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)