மேலும் அறிய

Watch Video : மெசேஜ் கொடுப்பது போஸ்டல் சர்வீஸ் வேலை... அதை நான் ஏன் செய்யவேண்டும்? பதிலளித்த ஷாருக்கான்  

என்னிடம் யாராவது நீ இப்படி தான் உன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என அறிவுரை கூறினால் நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் சினிமா மூலம் மெசேஜ் கொடுக்க வரவில்லை - நடிகர் ஷாருக்கான்

பாலிவுட் சினிமாவின் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் சினிமா துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். கோடிக்கணக்கான ரசிகர்களின் நாடி துடிப்பாய் இருந்து வருகிறார். ஒரு சிறிய பிரேக் எடுத்து கொண்டவர் சமீபத்தில்  வெளியான பதான் திரைப்படம் மூலம் ராக்கிங் என்ட்ரி கொடுத்துள்ளார். தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் இணைந்து நடித்த இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டுவருகிறது. 

 

Watch Video : மெசேஜ் கொடுப்பது போஸ்டல் சர்வீஸ் வேலை... அதை நான் ஏன் செய்யவேண்டும்? பதிலளித்த ஷாருக்கான்  

பல ஆண்டுகாலமாக ரசிகர்களின் விருப்பத்தை நன்கு அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு படங்களை தேர்வு செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதில் சிறந்த என்டர்டெய்னராக விளங்குபவர் நடிகர் ஷாருக்கான். பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் அவரிடம் "நீங்கள் இதுவரையில் நடித்த கதாபாத்திரங்களில் ஏதாவது மோசமான அல்லது வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தது குறித்து என்றாவது ஒரு நாள் வருத்தப்பட்டு உள்ளீர்களா? இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான உதாரணமாக என்றாவது தோன்றியுள்ளதா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான் இந்த கேள்வியை நான் தவறு என்று சொல்வேன். நான் சினிமா மூலம் மெசேஜ் கொடுக்க வரவில்லை. அது தபால் சர்வீஸ் செய்பவர்கள் வேலை. நான் இங்கு உங்களை என்டர்டெயின் செய்வதற்காக இருக்கிறேன். இதை நீ செய்ய வேண்டும் இதை நீ செய்யக்கூடாது என நான் சொல்ல போவதில்லை. ஏன் என்றால் நானே மிகவும் நல்ல மனிதன் கிடையாது. நான் அடுத்தவர்களை ஜட்ஜ் செய்ய முடியாது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யவேண்டும் எப்படி கடந்து போக வேண்டும் என நான் சொல்ல கூடாது. என்னிடம் யாராவது நீ இப்படி தான் உன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என அறிவுரை கூறினால் நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எண்டர்டெயின்மெண்ட் என்றால் நீங்கள் சென்று படத்தை அனுபவித்து ரசிக்க வேண்டும். உங்களை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம். ஒரு புகழ் பெற்ற மனிதர் ஏற்கனவே சொன்னதை போல திரைப்படங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. மெசேஜ்களை போஸ்டல் சர்வீஸ் தான் செய்ய வேண்டும்" என்றார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harith Nagendran (@harith_nagendran)


பல ஆண்டுகளுக்கு முன்னர் ஷாருக்கானின் கருத்து என்னவாக இருந்ததோ அதில் சிறிதும் மாற்றமில்லை. இன்றும் என்டர்டெயின்மென்ட் குறித்த அதே கருத்தை தான் பதிவிட்டுள்ளார். ஷாருக்கானின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அடுத்ததாக அட்லீ இயக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். பதான் படத்தின் அபாரமான வெற்றிக்கு பிறகு மீண்டும் அவரை திரையில் காண மிகவும் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.  

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget