மேலும் அறிய

Watch Video: ’பதான்’ பட பாட்டுக்கு இர்ஃபான் பதான் மகன் க்யூட் நடனம்... கொஞ்சித் தீர்த்த ஷாருக்!

'பதான்’ படத்தின் ’ஜூமே ஜோ பதான்’ என்ற ஹிட் பாடலுக்கு ஆட்டம்போட்ட கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் குழந்தைக்கு ’சோட்டா பதான்’ என்று பட்டம் கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் நடிகர் ஷாருக்கான்.

ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிப்பில்  வெளியாகி இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது ’பதான்’ . இப்படத்தை சித்தார்த் ஆனந்த் எழுதி இயக்க, யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது YRF ஸ்பை யுனிவர்ஸின் நான்காவது பாகமாகும்.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பிறகு ஷாருக் கான் இந்த படத்தில் நடித்துள்ளார்.  இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 25, 2023 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்தார்.

இப்படத்தில் ஷாருக்கான் RAW பீல்ட் ஏஜெண்டான பதான் ஆக நடித்துள்ளார். பதான் படத்தின் இசையை விஷால்-சேகர் இசையமைக்க, சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோர் பின்னணி இசையமைத்துள்ளனர்.

பதான் படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பலத்த வரவேற்புடன் படம் வெளியானது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததுடன், அதே அளவிற்கு வசூலிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது. உலக அளவில் ரூ.1000 கோடி வசூல், இந்தித் திரைப்படங்களில் அதிக வசூல் போன்ற பல சாதனைகளை இப்படம் புரிந்துள்ளது.

சோட்டா பதான்..

இந்நிலையில், பதான் படத்தின் ’ஜூமே ஜோ பதான்’ என்ற ஹிட் பாடலுக்கு ஆட்டம்போட்ட கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் குழந்தைக்கு ’சோட்டா பதான்’ என்று பட்டம் கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் நடிகர் ஷாருக்கான்.

இர்ஃபான் பகிர்ந்த ட்வீட்:

முன்னதாக இர்ஃபான் பதான் பகிர்ந்த ட்வீட்டில் தனது மகனின் க்யூட்டான நடனம் அடங்கிய வீடியோவை போஸ்ட் செய்ததுடன் அதில் ஷாருக்கானை டேக் செய்து, ”கான் சார் உங்கள் ரசிகர்கள் பட்டியலில் இன்னுமொரு க்யூட்டான ரசிகரை சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை பலரும் ரசித்து, பகிர்ந்து, பின்னூட்டங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரீஷேர் செய்த ஷாருக்கான்:

இந்நிலையில், இந்த வீடியோவை ரீஷேர் செய்த ஷாருக்கான், ”இவர் உங்களைவிட இன்னும் அதிகமான திறமைகளைக் கொண்டுள்ளார்” என்று கூறியதுடன் ’சோட்டா பதான்’ என்று அடைமொழியும் கொடுத்து பதிவிட்டுள்ளார். ஷாருக்கானின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஷாருக் ரசிகர்கள் ஒருபுறம், இர்ஃபான் பதான் ரசிகர்கள் மறுபுறம் என மாறி மாறி ஷேர் செய்ய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஓடிடியிப் பதான்..

முன்னதாக கடந்த புதன் கிழமை, அமேசான் ப்ரைம் வீடியோவில் பதான் வெளியானது குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget