Shaam on Varisu: அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட.. ‘வாரிசு’பட நடிகரை புகழ்ந்த நடிகர் ஷ்யாம்..!
’வாரிசு’படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் ஷ்யாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
![Shaam on Varisu: அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட.. ‘வாரிசு’பட நடிகரை புகழ்ந்த நடிகர் ஷ்யாம்..! Shaam shares a photo with Prakash Raj from the sets of Varisu Shaam on Varisu: அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட.. ‘வாரிசு’பட நடிகரை புகழ்ந்த நடிகர் ஷ்யாம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/25/c5e0b44194f6851ae90c1d06026a55f11658726355_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வாரிசு படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் ஷ்யாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
நடிகர் ஷ்யாம் வெளியிட்டு இருக்கும் பதிவில், நடிகர் பிரகாஷ்ராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, என்ன ஒரு அருமையான மனிதர், பிரகாஷ்ராஜ் சார் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல, மிகச்சிறந்த மனிதரும் கூட.. லவ் யூ சார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
நடிகர் விஜய்யின் 66ஆவது படமாக உருவாகி வரும் படத்திற்கு ‘வாரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. பிரபல இயக்குநர் ‘வம்சி’ இயக்கும் இப்படத்தில் தென்னிந்திய திரைப்பிரபலங்களான பிரபு, ஷ்யாம், சரத்குமார் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு தமன் இசைமைக்கிறார். இந்த நிலையில் வாரிசு படத்தில் பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் வாரிசு படத்தில் விஜய் மொபைல் ஆப் டிசைனராக நடிப்பதாகவும், அவரின் பெயர் விஜய் ராஜேந்திரன் என்றும் சொல்லப்பட்டது.
4,5 கீபோர்டை உடைத்துவிட்டேன்
முன்னதாக, வாரிசு திரைப்படம் பற்றி தமன் பேசுகையில், "முதல்ல ஹீரோவுக்கு ஃபேனா இருக்கணும், விஜய்க்கு ஃபேனா இல்லேன்னா வாத்தி கமிங் வராது. அதை செய்யுறதுக்கு 2,3 கீபோர்டை உடைக்கனும். வாரிசு அப்படிதான், நாங்க எல்லாருமே விஜயை ரசிகரா இருந்து ரசிக்குறவங்க. நான் ஏதாவது ட்யூன் போடுவேன், விவேக் குதிப்பார், வம்சி அவருக்கு மேல குதிப்பார். இதுவரைக்கும் 4,5 கீபோர்டை உடச்சிட்டேன். ஒரு நல்ல ஆல்பமா உருவாகிருக்கு. ஆறு பாட்டுள்ள ஒரு ஆல்பத்துல வேலை செஞ்சி ரொம்ப நாள் ஆச்சு. எல்லா வகையான எமோஷனும் நிறைந்த ஒரு ஆல்பம். அத்தனை பேர் ரசிக்கனும்ன்னா இங்க நம்ம அவ்ளோ வேலை செய்ய வேண்டியது இருக்கு. படம் குடும்ப படம்ன்றதால மியூசிக் சாஃப்டா இருக்கும்ன்னு நினைக்க வேண்டாம், நல்லா இறங்கி வேலை செஞ்சிருக்கோம்", என்றார்.
தேசிய விருது
தமனுக்கு அண்மையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆல வைகுந்தபுரமுலு திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார் தமன். அந்த திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'புட்ட பொம்மா' பாடல் 15 நிமிடத்தில் உருவானது என்றும் இந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)