மேலும் அறிய

Sevvanthi Divya Shridhar: செவ்வந்தி சீரியல் ஹீரோயினுக்கு பிறந்தது பெண் குழந்தை..! சிசுவுக்கு அளித்த உறுதி என்ன தெரியுமா?

செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர் குழந்தையை பெற்றெடுத்தது தொடர்பாக, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்,  அத்தனை சூழலிலும் உனக்கு நான் துணையாக இருப்பேன் என குழந்தைக்கு உறுதியளித்துள்ளார்.

திவ்யா ஸ்ரீதர் பதிவு:

தனக்கு பிறந்த பெண் குழந்தையின் பிஞ்சு கைகள் உடன் கைகோர்த்தவாறு, திவ்யா ஸ்ரீதர் இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த காத்திருப்பு நீண்டது. ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்ன நடந்தது என்பதற்காக அல்ல, ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதற்காக. நீ கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, பலம் கண்டிப்பாக நிபந்தனையற்றது.

என்னில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் உனக்கு நன்றி கூறுகிறேன், மேலும் விசித்திரக் கதைகளைப் போல என்றென்றும் உன்னில் ஒரு பகுதியாக நான் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உன்னை காதலிக்கிறேன் என் அன்பு தேவதையே! என் அழகான பெண் குழந்தையே எனது பயணம் முழுவதும் ஆதரவளித்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி, தயவுசெய்து அதை தொடர்ந்து  கொடுங்கள். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கணவருடன் மோதல்:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதையடுத்து தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் அர்னாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். அதோடு தான் கருவுற்று இருக்கும் விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.

ஆனால்,  தனது கணவர் அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாகி, தன்னை தவிர்ப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து அர்னாவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த அவர்  அர்னாவ் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

பேட்டியில் அழுத திவ்யா ஸ்ரீதர்:

அண்மையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த திவ்யா “பலரும் அவனே ஏமாத்திட்டு போயிட்டான். உனக்கு இந்த குழந்தை வேண்டாம்ன்னு அட்வைஸ் பண்ணாங்க. ஆனா, எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. கடவுள் கொடுத்த இந்த குழந்தையை பெற்றெடுக்கவே விரும்பினேன். 4 மாசத்துலயே பிரேக் எடுக்க விரும்பினேன். ஆனால் என் வாழ்க்கையில் என்னென்னவோ நடந்துவிட்டது. அதெல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அதன் பிறகு பொருளாதார ரீதியாக நான் வேலை செய்ய வேண்டிய சூழல் வந்தது. இப்போது 9-வது மாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 10-15 நாட்களில் குழந்தை பிறந்துவிடும். ஆனால் இன்னும் கூட ஓய்வெடுக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள். அதனால் இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அவனை நல்ல மனிதனாக வளர்ப்பேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுப்பேன்” என கண்ணீர் மல்க பேசியிருந்தார். இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதை திவ்யா ஸ்ரீதர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget