மேலும் அறிய

Dharshana Sun TV : மீண்டும் சன் டிவிக்கு வந்த சித்தி 2 யாழினி... புதிய சீரியல் கதாநாயகியாக தர்ஷனா... யாருப்பா ஹீரோ?

சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலின் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கிறார் தமிழும் சரஸ்வதியும் புகழ் நடிகை தர்ஷனா.  

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக பொருந்தி அனைவரின் நெஞ்சங்களிலும் வசுவாகவே வாழ்ந்தவர் நடிகை தர்ஷனா ஸ்ரீபால். சமீபத்தில் தர்ஷனா 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது. இதை கேட்டு மிகுந்த அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக அவர் புதிய சீரியலின் கதாநாயகியாகிறார் என்ற தகவல் வெளியானது. இதனால் சற்று ஆறுதல் அடைந்தனர் தர்ஷனா ரசிகர்கள் என்றாலும் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் அவர் மிஸ்ஸிங் என்பது வருத்தம்தான்.

சீரியல் வாய்ப்பு எப்படி :

வட இந்தியாவை சேர்ந்த தர்ஷனா ஸ்ரீபால் பிறந்து வளர்ந்தது எல்லாம் நம்ம திருச்சியில். ஃபேஷன் டிசைனிங் படித்து முடித்த தர்ஷனா சன் டிவி குழுமத்தில் ஸ்டைலிஷ் டிசைனராக வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு கிடைத்தது காம்பியரிங் வாய்ப்பு. ஆதித்யா சேனலின் லைவ் ஷோ ஆங்கராக தர்ஷனாவுக்கு வாய்ப்பு கிடைத்த பிறகு அந்த ஷோ ரீச் பிரமாதமாக அமைந்துள்ளது. அது அப்படியே சீரியலில் நடிக்க வாய்ப்பையும் பெற்று தந்துள்ளது.

சன் டிவி டூ விஜய் டிவி :

சித்தி 2 சீரியலில் யாழினி என்ற கதாபாத்திரத்தில் முதலில் சாதுவாக அமைதியான அன்பான பெண்ணாக நடித்து பின்னர் வில்லியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் தர்ஷனா. அடுத்ததாக கிடைத்த வாய்ப்பு தான் 'தமிழும் சரஸ்வதியும்' வசு ரோல். ஒரு பணக்கார பெண்ணாக இருந்தும் மிகவும் தன்மையான ஒரு பெண்ணாக வசுவின் கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்த்தது. மிகவும் பிரபலமாக இருந்தவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்றதும் அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

Dharshana Sun TV : மீண்டும் சன் டிவிக்கு வந்த சித்தி 2 யாழினி... புதிய சீரியல் கதாநாயகியாக தர்ஷனா... யாருப்பா ஹீரோ?

சன் டிவியில் புதிய சீரியல் ஹீரோயின் :

தற்போது தர்ஷனா சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றின் கதாநாயகி. சில தினங்களுக்கு முன்னர் தான் புதிய சீரியலில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த சீரியலின் ஹீரோ மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த விவரம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இந்த புது சீரியல் ஹீரோ யாராக இருப்பார், எந்த நேரத்தில் இந்த சேர்ல ஒளிபரப்பாக போகிறது என பல கேள்விகள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. விரைவில் சீரியல் குறித்த முழு விவரம் மற்றும் விளம்பரம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தர்ஷனாவை விரைவில் ஹீரோயினாக பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

யாழினி, வசு போல யதார்த்தமான ஒரு நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார் தர்ஷனா என்ற நம்பிக்கை அவரின் ரசிகர்களின் உள்ளது. மேலும் இதுதான் தர்ஷனா உங்களுக்கான சரியான இடம் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget