மேலும் அறிய

Actress Divya: மனைவி திவ்யாவை துன்புறுத்திய வழக்கு.. படப்பிடிப்பு தளத்தில் புகுந்து சீரியல் நடிகர் அர்னவ் கைது

சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை திவ்யா.

தன்னை தாக்கியதாக சீரியல் நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் சீரியல் நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை திவ்யா. தற்போது திவ்யா கன்னடம் சீரியல்களிலும் மற்றும் தமிழ் சீரியலான செவ்வந்தி தொடரில் நடித்து வரும் இவருக்கும்  சின்னத்திரை நடிகர் அர்னவிற்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

அர்னவ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "செல்லம்மா" தொடரில் சித்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருவரும் "கேளடி கண்மணி" தொடரில் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்திருந்தது.இரண்டு வருடமாக லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில் அதன்பின் திருமணம் நடந்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு  கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாகவும், இதனால் கருக்கலையும் அபாயம் ஏற்பட்டதாகவும் திவ்யா வீடியோ வெளியிட்டு அதிர வைத்தார். இதனை மறுத்த அர்னவ் திவ்யா மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். மேலும் அர்னவ் சீரியல் நடிகையோடு பழகி வருவதாகவும் கூறி ஆடியோ ஒன்றை திவ்யா வெளியிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி புகார் தெரிவித்தும், ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். 

இதற்கிடையில் கர்ப்பிணி பெண்ணான தன்னை தாக்கியதற்காக திவ்யா போரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேரில் ஆஜராக சொல்லியும் அர்னவ் வரவில்லை.

இதனால்  அக்டோபர் 14 ஆம் தேதி அவரை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகாமல் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18 ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வழக்கறிஞர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.மேலும் அவர் தலைமறைவானதாகவும் சொல்லப்பட்டது. 

இந்நிலையில் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட அர்னவ்வை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget