மேலும் அறிய

17 YearsOf Pudhupettai: அயோக்கியர்களின் உலகம்.. செல்வராகவனின் மாஸ்டர்பீஸ்.. புதுப்பேட்டை வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு..

செல்வராகவன் இயக்கி தனுஷ், சினேகா நடித்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த படம் புதுப்பேட்டை, வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன

அதுவரை ஒரு முழு கேங்க்ஸ்டர் உலகத்தை ஒரு தமிழ் படத்தில் யாரும் பார்த்ததில்லை. அப்படியே பார்த்திருந்தாலும் அந்தக் கூட்டத்திற்குத் தலைவனாக இருப்பவன் முரட்டு உடம்புடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் ஒருவனைத்தான் பார்த்திருந்தார்கள். தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு ஒல்லியான தேகம் கொண்ட ஒரு பையன் ஒரு மிகப்பெரிய கேங்க்ஸ்டர் ஆகிறான் என்று சொன்னால் யாரும் நிச்சயம்  நம்பியிருக்க மாட்டார்கள்தான்.

இந்தக் கதையை நிஜம் என்று நம்பவைப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருந்தது. இந்த கதையை செல்வராகவன் என்கிற இயக்குநர் எடுக்க வேண்டும். தனுஷ் என்கிற ஒரு நடிகர் நடிக்க வேண்டும் . கடந்த 2006-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி புதுப்பேட்டை என்கிற ஒரு படம் வெளியானது. இன்று அந்தப் படம் வெளியாகி கிட்டதட்ட 17 ஆண்டுகள் கழித்தும் இது மாதிரியான ஒரு கதையை யாரும் பார்த்ததில்லை.

அப்படி என்ன புதுப்பேட்டை படத்தில் பாராட்டுவதற்கு இருக்கிறது என்று 2023-ஆம் ஆண்டில் நமக்கு தோன்றுவதில் தவறில்லை. இன்று கேங்ஸ்டர் படத்தில் கிட்டத்தட்ட நாம் புதிதாக பார்ப்பதற்கு எதுவும் இல்லாத அளவுக்கு அத்தனை படங்களை, அத்தனை மொழிகளிலும் பார்த்துவிட்டோம்.

ஆனால் புதுப்பேட்டைப் படத்தை அது வெளியான நேரத்தில் திரையரங்குகளில் பார்த்த ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும். படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியும் அதுவரை எந்தத் தமிழ் ரசிகர்களும் பார்த்திராதது. ஒரு காட்சியைப் பார்த்த ரசிகர்கள் அது கொடுத்த அதிர்ச்சியிலிருந்து வெளிவருவதற்கு முன்பே அடுத்தக் காட்சி அவர்களை மிரள வைத்திருக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் பையை மாட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் அதே சிறுவன்தான் நம் கண் முன் தேவதையா சாத்தானா என்கிற பதட்டத்தை உண்டாக்கும் கண்களால் நம்மை பார்ப்பான். படம்  சமூகத்தில் அயோக்கியர்களின் கதையைத்தான் நமக்கு சொன்னது. ஆனால் அதில் நம்மால் நட்பை புரிந்துகொள்ள முடிந்தது, துரோகத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது, வஞ்சத்தை, கருணையை எப்படி புரிந்துகொள்ள முடிந்தது.

புதுப்பேட்டை படம் வெளியான சமயத்தில் அவ்வளவு பெரிய வெற்றியெல்லாம் அடையவில்லை. காரணம் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை என்று இல்லை. இந்தப் படம் தனக்கு பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்கிற குழப்பமே அவர்களிடம் இருந்தது. அதுவரை தமிழ் சினிமாவில் வந்த படங்கள் மக்கள் மனதில் உருவாக்கியிருந்த ஒட்டுமொத்த ரசனையையும் இந்தப் படம் கலைத்துப் போட்டது என்றே சொல்லலாம்.

இந்தப் படத்தின் கதாநாயகன் முந்தைய கதாநாயகர்களைப் போல் ஒழுக்கசீலன் இல்லை. தன் நண்பனின் தங்கை திருமணத்திற்கு தாலி எடுத்துக்கொடுக்க சென்று அவளுக்கு தாலி கட்டுபவன். இந்தப் படத்தின் கதாநாயகிகள் யாரும் கற்புக்கரசிகள் இல்லை ஒழுக்கம், வரம்பு, என்று சமூகம் வரையறுக்கும், நம்பும் எதையும் நீங்கள் இங்கே காணமுடியாது.

அந்த உலகத்தில் அவரவருக்கு அவரவர் நியாயங்கள். ஆனால் அதில் ஒரு வாழ்க்கைத் துடிப்பை அவர்களால் பார்க்க முடிந்தது. இப்படியான நிலையில் இந்தப் படத்தில் நாம் யார் பக்கம் என தெரிந்துகொள்வதற்கே கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தேவைப்பட்டன. 2016-ஆம் ஆண்டு அதன் பத்தாவது ஆண்டை முன்னிட்டு புதுப்பேட்டை படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த முறை ரசிகர்ளுக்கு தங்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்திருந்தது. இது சாத்தியமாக ஒரு செல்வராகவனும், ஒரு தனுஷும் தேவைப்பட்டார்கள்!

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
Embed widget