7G Rainbow colony 2 : மீண்டும் களத்தில் செல்வராகவன்.. விரைவில் தொடங்கும் '7ஜி ரெயின்போ காலனி 2' ஷூட்டிங்...
செல்வராகவன் - ரவி கிருஷ்ணா கூட்டணியில் விரைவில் துவங்க உள்ளது 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
![7G Rainbow colony 2 : மீண்டும் களத்தில் செல்வராகவன்.. விரைவில் தொடங்கும் '7ஜி ரெயின்போ காலனி 2' ஷூட்டிங்... Selva raghavan all time favorite 7g rainbow colony movie part 2 shooting to commence soon 7G Rainbow colony 2 : மீண்டும் களத்தில் செல்வராகவன்.. விரைவில் தொடங்கும் '7ஜி ரெயின்போ காலனி 2' ஷூட்டிங்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/86e4a7eb157bab8e37786cb93e72f03d1692960970067224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான '7ஜி ரெயின்போ காலனி' மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இயக்குநராக செல்வ ராகவனுக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று கொடுத்த திரைப்படம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் படம் புதிய பரிணாமத்தை எட்டியது. காதலர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் 20 ஆண்டுகளை எட்டும் நிலையில் அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரவி கிருஷ்ணா தொடர் பிளாப்...
இப்படத்தில் ரவி கிருஷ்ணா - சோனியா அகர்வால் கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆனது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பார்வையாளர்களை உருக வைத்தது. அந்த காலகட்டத்தில் வெளியான மிக சிறந்த காதல் படங்களில் ஒன்றாக இப்படம் இருந்தது. மேலும் அப்படத்தின் பாடல்கள் இன்று வரை பிளே லிஸ்டில் இடம்பெறும் அளவுக்கு ஃபேவரைட் பாடல்களாக இருக்கின்றன. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரவி கிருஷ்ணா 'சுக்ரன்', 'கேடி' போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் 7ஜி ரெயின்போ காலனி அளவுக்கு பெரிய அளவில் கவனம் பெறவில்லை.
தற்போது இப்படம் 20 ஆண்டுகளை நிறைவுசெய்ய உள்ள நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க உள்ளார் என்றும் அதில் மீண்டும் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் தகவல் பல மாதங்களாக வெளியாகி வந்தது.
7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2 :
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2 அப்டேட் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு துவங்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் செல்வராகவன் :
இயக்குநராக இருந்த செல்வராகவன் சமீபகாலமாக நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிக்க துவங்கிய செல்வராகவன் நானே வருவேன், பகாசுரன், சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த 'நானே வருவேன்' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2 இயக்க உள்ளார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 குறித்த அப்டேட் கூட டிஸ்கஷனில் இருந்து வருகிறது என கூறப்படுகிறது.
தனுஷ் இயக்கி நடிக்கும் டி50 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)