மேலும் அறிய

Divya Sathyaraj: அய்யோ.. இத்தனை மாத்திரைகளா.. சத்யராஜ் மகள் வெளியிட்ட ஷாக் தகவல்.. என்ன நடந்தது?

ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மக்களுக்கு காலாவதியான மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பல சேவைகளை செய்து வரும் இவர் ஒரு முக்கியமான வீடியோ பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். 

Divya Sathyaraj: அய்யோ.. இத்தனை மாத்திரைகளா.. சத்யராஜ் மகள் வெளியிட்ட ஷாக் தகவல்.. என்ன நடந்தது?

திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில், “என்னிடம் சிகிச்சைபெற்று வந்த நோயாளி  மருந்தகத்தில் வாங்கிய சில மருந்துகள் காலாவதி தேதியை தாண்டியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற காலாவதியான மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படலாம். இது போல பல முறை நிகழ்ந்துள்ளது.

பல முறை பல மருந்து கடைகளில் இது போன்ற காலாவதியான மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன;  மக்கள்தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அவர்கள் வாங்கும் அனைத்து மளிகை பொருட்கள், மருந்துகள் என அனைத்திலும் காலாவதி தேதியை பார்த்த பிறகு வாங்க வேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்க கூடிய சிரப், கிரீம், ஷாம்பு, பால் பவுடர் என எது வாங்கினாலும் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது மிக மிக முக்கியமானது.

எந்த துறையிலும் தவறுகள் நடக்க கூடாது அதிலும் மருத்துவ துறையில் தவறுகள் நடந்தால் அது அது மனிதனின் உடல்நலத்திற்கும் உயிருக்கும் ஆபத்து. மருந்து கடைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். மக்கள் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தான் மருந்து வாங்குகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்னையை  அந்த மருந்து குணப்படுத்தும் எனும் நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள்.

பணத்தை சம்பாதிப்பதற்காக அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுவது மனிதநேயம் இல்லாத ஒரு செயல். பணத்தை விடவும் மனிதநேயம் தான் முக்கியம்; மருத்துவத்துறைக்கும் நியாயம், தர்மம்  உள்ளது என்பதை மறக்காதீர்கள். உங்கள் கடையில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்வதற்கான ஒரு சிஸ்டத்தை கொண்டு வரவேண்டும். மக்களை ஏமாற்றுவதை முதலில் நிறுத்துங்கள்” என அந்த வீடியோ பதிவில் சில முக்கியமான தகவல்களை ஒரு ஊட்டச்சத்து நிபுணராக மக்களின் மீது இருக்கும் அக்கறையில் வெளியிட்டுள்ளார் திவ்யா சத்யராஜ். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

இது போல பல முறை திவ்யா சத்யராஜ் காலாவதியான மருந்துகளால் ஏற்படும் தீங்கு பற்றி பதிவிட்டுள்ளார். தற்போது அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.   

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget