Sardar Teaser: அந்த 6 பேரும் ஒருத்தன் தான்... சர்தார் பட டீசரை வெளியிட்ட சூர்யா...
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவரும் சர்தார் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சர்தார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும், ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரை தற்போது நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் டீசர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த டீசரில் கார்த்தி இந்தப் படத்தில் பல்வேறு வேடங்களில் வருவது போல் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த டீசர் வெளியானது முதல் பலர் இதை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். இந்தப் பதிவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
Good luck team #Sardar @Karthi_offl Here’s the teaser! https://t.co/Ee0sk6NgZB
— Suriya Sivakumar (@Suriya_offl) September 29, 2022
Hearty wishes to team #PonniyinSelvan for a blockbuster start!!! #Sardarteaser #Sardardeepavali @PsMithran @Prince_Pictures @Udhaystalin@gvprakash
இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முன்னதாக 'சர்தார்' பட டப்பிங்கில் நடிகர் கார்த்தியும் இயக்குநர் பி.எஸ். மித்ரனும் பேசி கொள்ளும் வீடியோ வெளியானது. இது குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சர்தார் டப்பிங் ... உரையாடல்ஸ் வித் கார்த்தி” என்று பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், மித்ரன், நாயகன் கமல்ஹாசன் மாதிரி பேசிக்காட்டுங்க என்று கார்த்தியிடம் சொல்ல... சுதாரித்துக்கொண்ட கார்த்தி... எங்க நீங்க பேசுங்க என்கிறார்...
View this post on Instagram
உடனே மித்ரன்... இல்ல அங்க இருந்து இன்ஸ்பையர் ஆனது அதான்... என சமாளிக்க... நமக்கு என்ன வருமோ அதை பண்ணுவோம் என்ற கார்த்தி.. "நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் அதை நாற்பதாயிரம் பேருக்கு தெரியிற மாதிரி பண்ணனும்" என்று பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இதற்கு முன்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டப் படைப்பான பொன்னியின் செல்வன் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.