மேலும் அறிய
HBD Sarath Kumar:” உடம்பும், ஹெல்த்தும்தான் எல்லாமே” ஃபிட்னெஸ் கிங் சரத்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்..
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரத்குமார்.

நடிகர் சரத்குமார்
தமிழ் திரையுலகின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் பிட்னெஸ் கண்டு பலரும் வியந்துள்ளனர். தனது 18 வயது முதல் உடற்பயிற்சி செய்து வரும் சரத்குமார் Mr. மெட்ராஸ் பட்டத்தை வென்றவர். 67 வயதானாலும் இன்றும் தனது உடற்பயிற்சியை தொடர்வதோடு இளைஞர்களுக்கு ஃபிட்னெஸ் டிப்ஸ் வழங்குகிறார். அவரது பிறந்தநாள் இன்று
படப்பிடிப்பில் விபத்து:
படப்பிடிப்பில் விபத்து:
காஞ்சனா , நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமான பெரிய பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது சரத்குமாருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக குருத்தெலும்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது. காயம், விபத்து ஏற்படுவது ஒரு ஆக்ஷன் ஸ்டார்களின் வாழ்க்கையில் சகஜம் என்றாலும் அது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சைக்கு குறைந்தது ஐந்து வாரங்கள் ஓய்வு அவசியம். இருப்பினும் ஐந்தே நாட்களில் மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினார் சரத்குமார். இது திரையுலக வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.
எப்படி மீண்டேன்:
இதுகுறித்து அவர் கூறுகையில் உடற்பயிற்சி என்பது மழை நீரை சேமிப்பது போன்றது. ஒரே இரவில் அது சாத்தியமாகாது. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். 20 வயதில் மெட்ராஸ் பல்கலைக்கழகம் சரத்குமார் அவர்களுக்கு Mr. மெட்ராஸ் பட்டத்தை வழங்கியது. விழுவதும் எழுவதும் சகஜம் ஆனால் அவை என்றும் என்னை பாதித்ததில்லை. என்னை நானே ஊக்கப்படுத்தி கொண்டு படி படியாக என்னுள் இருக்கும் ஆலோசகரின் உதவியால் மீண்டு வந்தேன். ஒரு தயாரிப்பாளராக ஓய்வும் முக்கியம் அதில் இருந்து மீண்டு வருவதும் மிக முக்கியம் என்பதை உணர்வேன். இல்லையேல் பல வகையில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் எப்படி அறுவை சிகிச்சைக்கு பிறகு உடனடியாக மீண்டு வந்தார் என்பதை பற்றி கூறினார்.
அறுவை சிகிச்சை முடிந்து வந்த கையேடு வெப் தொடர் ஒன்றின் சண்டை காட்சிகளை முடித்து கொடுத்துள்ளார். ஒரு நடிகனுக்கு தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். தமிழ், தெலுங்கு மற்றும் தனது சொந்த தயாரிப்பில் ஒரு வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
பிட்னெஸ் டிப்ஸ்:
தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவுடன் இணைந்து சரத்குமார் வெளியிட்ட ஃபிட்னஸ் ஹேக்குகள் வீடியோ மிகவும் வைரலானது. உடற்பயிற்சி செய்வோருக்கு சரத்குமார் ஒரு சில டிப்ஸ் கொடுத்துள்ளார். செய்ய கூடாதவை : மது அருந்துதல், புகை பிடித்தல், நம்மால் கட்டுப்படுத்த இயலாத விஷயங்களை எண்ணி கவலை படுதல். செய்ய வேண்டியவை: அவரவரின் உடலுக்கு தேவையானதை மட்டுமே செய்தல். மேல் பாடிபில்டிங் வேண்டும் என்றால் 50 லுங்குகள், சிட்-அப்கள் அவசியம். உதாரணத்திற்கு என்னால் தற்போது டிரெட்மில்லில் நடக்கவோ ஓடவோ முடியாது என்பதால் உணவு பழக்கத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என்று சில அவசியமான உடற்பயிற்சி டிப்ஸ் வழங்கினார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள், சரத்குமார் Sir.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement