DD Returns 2: டிடி ரிட்டர்ன்ஸ் 2வில் சந்தானம் ஜோடியாக விஜய்யின் தி கோட் ஹீரோயின்.. தயாரிப்பாளரான நண்பர் ஆர்யா!
டிடி ரிடர்ன்ஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கல் வெளியாகியுள்ளன
தில்லுக்கு துட்டு
காமெடியை விட்டு நாயகனாக களமிறங்கிய சந்தானத்துக்கு கைகொடுத்தவை ஹாரர் படங்கள்தான். ராம்பாலா இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் தில்லுக்கு துட்டு. வழக்கம் போல ஏழை நாயகன் பணக்கார நாயகியை காதலிக்கிறார். எப்படியாவது தனது மகளின் காதலை பிரிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அப்பா. ஒரு பாழடைந்த அரண்மனையில் வைத்து நாயகனை கொலை செய்ய திட்டம்போடுகிறார். இந்த கொலைப் பழியை பேய்களின் மேல் சுமத்திவிடலாம் என்று முடிவு செய்கிறார். இப்படி தயாரிப்பாளரிடம் இயக்குநர் கதை சொல்லி முடிக்க கடைசியில் தயாரிப்பாளர் எலலால் நல்லா இருக்கு கடைசில ஒரு உண்மையான பேய் இருந்தா நல்லா இருக்கும் என்கிறார். அப்படி தொடங்கியது தான் தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றி வரிசை. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2019 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது.
டிடி ரிடர்ன்ஸ்
#DDReturns2 (DhillukuDhuddu4) to kick-start soon🎬⌛
— AmuthaBharathi (@CinemaWithAB) June 21, 2024
- MeenakshiChaudhary to play the female lead ✨
- Directed by Premanand (DDReturns Dir)🎥
- Arya going to produce the movie🤝 pic.twitter.com/0wcmz7J0bb
இதே வரிசையில் கடந்த ஆண்டு வெளியான படம் டிடி ரிடர்ன்ஸ் . முந்திய இரண்டு பாகங்களை ராம்பாலா இயக்கிய நிலையில், இந்த பாகத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார். சுரபி, மாசூம் ஷங்கர், ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றது இப்படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது.
பிரேம் ஆனந்த் இந்த படத்தை இயக்கவிருக்கும் நிலையில் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான ஆர்யா இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார். மீனாக்ஷி செளதரி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத் தக்கது. டிடி ரிடர்ன்ஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : Vijay: கள்ளக்குறிச்சி விவகாரத்திற்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க விஜய் உத்தரவு! ரசிகர்கள் ஷாக்
Maharaja Box Office : இந்த ஆண்டின் அதிகவேக 50 கோடி வசூல்...மகாராஜா பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்