சாமியார் போல மாறிய விஜய் சேதுபதி ஜோடி.. வட இந்திய பொங்கலும், சஞ்சிதாவின் மெசேஜும்...
நடிகை சஞ்சிதா ஷெட்டியை இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
வட இந்தியாவில் ஒரு கோயிலில் புனித நீராடி பொங்கலை கொண்டாடி சாமியார் போல காட்சியளித்திருக்கிறார் பிரபல நடிகை சஞ்சிதா ஷெட்டி.
தமிழில் ‘அழுக்கன் அழகாகிறான் ‘ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான, நடிகை சஞ்சிதா ஷெட்டி, ஜெயம் ரவியின் ‘தில்லாலங்கடி’ படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்ததன் மூலம் அறியப்பட்டார். அதன்பிறகு, ‘சூது கவ்வும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும், பீட்சா இரண்டாம் பாகமான வில்லா படத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பள்ளு படாம பாத்துக்க’, ‘பகீரா’, ‘அழகிய கண்ணே’, ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகயுள்ளன.
இந்த நிலையில், நடிகை சஞ்சிதா ஷெட்டி, வட இந்தியாவில் உள்ள ஒரு கோயிலில் புனித நீராடி பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில், பார்ப்பதற்கு சாமியார் போல் இருக்கும் அவர், ‘இனிய மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தேன்’ எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதலங்களில் வைரலாகி வருகின்றன.நடிகை சஞ்சிதா ஷெட்டியை இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
தமிழ்நாடு முழுவதும் நேற்று பொங்கல் கொண்டாடிய நிலையில், இன்று சிலருக்கு பொங்கல் பண்டிகை ஆகும். அதன்படி, பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அருண் விஜய், நடிகை ஷெரின், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோர் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் தங்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் புகைப்படங்களும் வைரலாகியும் வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்