ஃபேமிலி மேன் சீரிஸுக்காக சமந்தாவுக்கு கிடைத்த மரியாதை.. சமந்தா எழுதிய எமோஷ்னல் போஸ்ட்
விடுதலைப்புலியாக சமந்தா நடித்த நிலையில், ஈழத்துப்பெண்களை இழிவாக சித்தரித்து விட்டதாகவும், தி பேமிலி மேன் வெப் சீரிஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு சர்ச்சை கருத்துகள் வெளியாகின.
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், தி பேமிலி மேன் படத்திற்காக சிறந்த வெப் சீரிஸ் நடிகை என சமந்தா விருதினைப்பெற்றுள்ளார். இவ்விருதுக்கு காரணமாக இயக்குநர்களுக்குப் பாராட்டுக்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.
தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் மூலம் டிஜிட்டல் உலகத்திற்கு அறிமுகமானர் நடிகை சமந்தா. திரைப்படங்களில் எந்தளவிற்கு தன்னுடைய திறமையினை வெளிப்படுத்தி இருந்தாரோ? அதற்கு கூடுதலாகவே இந்த வெப் சீரிஸில் விடுதலைப்புலியாக ராஜி என்ற கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருந்தார். ஆனால் சமந்தாவின் இந்த வெப் சீரிஸ் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது என்றே கூறலாம். ஆம் விடுதலைப்புலியாக சமந்தா நடித்த நிலையில், ஈழத்துப்பெண்களை இழிவாக சித்தரித்து விட்டதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு சர்ச்சை கருத்துகள் வெளியாகின.
இருந்தபோதும் இந்த வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்நிலையில்தான் தற்போது, மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த வெப் சீரிஸ் நடிகையாக சமந்தா விருதினைப்பெற்றுள்ளார். இதுத்தவிர 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்ற மலையாளப் படத்திற்கு சிறப்புப் பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விருதினைப்பெற்ற பின் சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் ”தி பேமிலி மேன் 2” பட இயக்குநர்களுக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அதில் சமந்தா இயக்குநர் ராஜ் மற்றும் டி.கேவும் என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இப்படத்தினை இயக்கினார்கள். அவர்களின் நம்பிக்கையை வீணாக்காமல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளமைக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் தனது ரசிகர்களுக்கும் நன்றியினைக் கூறியுள்ளார். மேலும் சமந்தா முதல்முறையாக விடுதலைப்புலியாக தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்தமையால் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் ராஜி என்ற ரோல் பெரிய பாராட்டினைப்பெற்றது.
#JustAnnounced ✨EQUALITY IN CINEMA (FEATURE)✨
— Indian Film Festival of Melbourne (@IFFMelb) August 20, 2021
CONGRATULATIONS TO The Great Indian Kitchen #TheGreatIndianKitchen @LukeDonnellan pic.twitter.com/ADudyav9UO
இதோடு இயக்குநர் ஜியோ பேபி இயக்கிய ”தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்ற மலையாள திரைப்படத்திற்கு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சமத்துவ சினிமா என்ற அம்சத்தில் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படம் சமூகத்தில் நிகழ்வும் ஆணாதிக்க அநீதிகளை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது.