Samantha | முன்னாள் மாமனாரை அன்னபூர்னா ஸ்டூடியோவில் திடீரென சந்தித்த சமந்தா!
ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஸ்டுடியோவிற்கு சமந்தா வந்துள்ளார் என்ற செய்தி வைரலானதால், அவரது வருகைக்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் யோசித்தனர்.
விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா, தனது முன்னாள் மாமனார் நாகார்ஜூனா ஸ்டுடியோவுக்கு வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிந்ததாக அறிவித்த பிறகு, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இருவரின் பல புகைப்படங்களை நீக்கியுள்ளார். தனது முன்னாள் கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காததால் நெட்டிசன்களால் ட்ரோலும் செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தனது முன்னாள் மாமனார் நாகார்ஜுனாவின் ஸ்டுடியோவுக்குச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகின. இதன்மூலம், சமந்தா, முன்னாள் கணவர் குடும்பத்துடனான தனது உறவை முழுவதுமாக துண்டிக்கவில்லை என்று தெரிகிறது.
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு சமந்தா வந்த செய்தி வைரலானதால், அவரது வருகைக்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் யோசித்தனர். தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. இயக்குநர் குணசேகர் இயக்கிய படத்திற்கு டப்பிங் பேச அவர் ஸ்டுடியோவில் இருந்ததாக இப்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் சமந்தா நடிக்கிறார். அந்த படத்திற்கான டப்பிங் பணிக்கு அங்கு சென்றாராம்.
நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்கள் நான்காவது திருமண ஆண்டு விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு பிரிந்ததாக அறிவித்தனர். அந்த மாதத்தின் பிற்பகுதியில், சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் இருந்து சைதன்யாவுடன் இருந்த புகைப்படங்களையும் நீக்கினார். இவர்கள், கோவாவில் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையில், சமந்தா, பாஃப்டா விருது பெற்ற ‘அடவுன்டவுன் அபே’ புகழ் பிலிப் ஜான் இயக்கவுள்ள ‘அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ மூலம் சர்வதேச திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார்.
‘அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்பது இந்திய எழுத்தாளர் டைமேரி என். முராரியின் இதே தலைப்பில் 2004 இல் அதிகம் விற்பனையான நாவலின் தழுவலாகும். சமந்தா இந்தப் படத்தில் இருபாலினராக நடிக்கிறார்.
View this post on Instagram
தி ஃபேமிலி மேனின் இரண்டாவது சீசனில் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராளியான இரக்கமற்ற ராஜியாக நடித்த பிறகு சமந்தா புகழ் இந்தியளவில் உயர்ந்தது. 34 வயதான சமந்தா, நான் ஈ, மகாநதி, மெர்சல் மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்