samantha | ’ சோதனை மேல் சோதனை ‘ - சமந்தா சர்ச்சையும் மேலாளர் விளக்கமும்!
அது எப்படி எல்லா ஆண்களையும் அதே லிஸ்டில் இணைக்க முடியும் என கூறி , பாடலை தடை செய்ய ஆண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக்கொண்ட இவர் , சமீபத்தில் அவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார். இது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்திற்கு பிறகு சமந்தா ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அவ்வபோது சில நேர்காணல்களின் அது குறித்து மனம் திறந்தும் பேசுகிறார் சமந்தா. தன்னை குறித்து வரும் எதிர்மறையான கருத்துகளை நான் எப்போதும் வரவேற்கிறேன். ஆனால் அதனை நாகரீகமான முறையில் கூறினால் சிறப்பாக இருக்கும் என கூறியிருந்தார். விவாகரத்தே எனக்கு மிகப்பெரிய வலி ஆனால் அதற்கான காரணங்களாக சமூக வலைத்தளங்களில் உலா வரும் வதந்திகள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.ரசிகர்கள் ஏமாற்றத்தால்தான் இப்படி செய்கிறார்கள் இருந்தாலும் எனது தனிப்பட்ட காரணங்களை பொதுவெளியில் எப்படி பகிர்ந்துக்கொள்ள முடியும் என கூறியிருந்தார்.
View this post on Instagram
அந்த பிரச்சனைகள் எல்லாம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஐடம் நம்பர் பாடல் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் ஆந்திர ஆண்கள் அமைப்பு சமந்தா ஆடிய பாடல் மீது வழக்கு தொடர்ந்தனர். வழக்கமாக இது போன்ற குத்து பாடல்களில் இரட்டை அர்த்தங்கள் பொதிந்து இருக்கும் .ஆனால் சமந்தா ஆடியுள்ள பாடல் சில ஆண்களை குற்றம் சாட்டுவதாக அமைந்தது. அது எப்படி எல்லா ஆண்களையும் அதே லிஸ்டில் இணைக்க முடியும் என கூறி , பாடலை தடை செய்ய ஆண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில் சமந்தா சில தினங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விசிட் அடித்தார். அதன் பிறகு அமீன் பீர் தர்காவிற்கு சென்ற அவர் . கடப்பாவில் ஒரு ஷாப்பிங் மாலை திறந்து வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து சமந்தா நேற்று ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் சமந்தாவிற்கு கொரோனாதான் வந்துவிட்டது என தெலுங்கு ஊடகங்கள் சில எழுத தொடங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த சமந்தா தரப்பு அதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில் லேசான இருமல் இருந்ததால் சமந்தா மருத்துவமனையில் பரிசோதனை செய்துக்கொண்டார். வீண் வதந்திகளை நம்ம வேண்டாம் . அவர் தற்போது நலமுடன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் “ என குறிப்பிட்டுள்ளனர்.