மேலும் அறிய

“சாமானியன்” திரைப்படம்: தயாரிப்பாளர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லையென ராமராஜன் ஆதங்கம்

இந்த ராமராஜனை மக்கள் இன்றும் மறக்காமல் இருக்கிறார்கள் என்றால் இசைஞானி இளையராஜா தான் காரணம். இளையராஜாவை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் TPV மல்டி பிளக்ஸ் திரையரங்கில் திரைப்பட நடிகர் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் 25 வது நாளாக வெற்றிகரமாக ஒடி கொண்டிருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக ராமராஜன் ஆலங்குளம் திரையரங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு ராமராஜன் ரசிகர் மன்றத்தினர், கிராமப்புற பெண் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வெடி வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது ஆர்வமிகுதியில் ரசிகர் ஒருவர் ராமராஜனை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து அவர் பேசும் போது,

தற்போது மக்கள் திரையரங்கிற்கு வருவதே கேள்விக்குறியாக உள்ள நிலையில், தனது படத்திற்கு பெண்கள் சாரை சாரையாக வருவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. மேலும் டிக்கெட் கட்டணம் அதிக அளவில் இருப்பதால், ஏழை எளிய சாமானிய மக்கள் திரையரங்குகளுக்கு வர இயலாமல் போய் விடுகிறது. நாளையில் இருந்து ஆலங்குளம் TPV திரையரங்கில் 50 ரூ மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறினார். மக்களுக்கு உள்ள பொழுதுபோக்குகளில் முக்கியமானது சினிமா. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் கட்டணத்தை குறைத்தால், ஏழை எளிய மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வருவார்கள். 35  வருடத்திற்கு பிறகும் கரகாட்டாக்காரன் படத்தில் உள்ள வரவேற்பு, தாய்மார்கள் மத்தியில் இன்றும் உள்ளது என்று பேசினார். அதனை தொடர்ந்து 25-வது நாள் விழாவை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி சாமானிய ரசிகர் ஒருவருக்கு கேக் ஊட்டினார். திரையரங்கு நிர்வாகத்தின் சார்பில் ராமராஜனுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமராஜன் கூறியதாவது,

“சாமானியன்” திரைப்படம்: தயாரிப்பாளர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லையென ராமராஜன் ஆதங்கம்

சினிமா என்பது மிகப்பெரிய பொழுதுபோக்கு. தியேட்டரில் 150 சீட்டுக்கு 50 ரூபாய் என வைக்கலாம். 50 ரூபாய் என்றால் சாமானிய மக்கள் எளிதாக வருவார்கள், உயர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு கூடுதலாக  வைக்கலாம். இதனை தமிழகம் முழுவதும் வைக்கலாம். அப்படி செய்தால் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பார்கள் என்றார். கரகாட்டக்காரன் படம் பார்த்த ஆடியன்ஸ் தற்போது இல்லை, அப்படி ஒரு மிகப்பெரிய படம் அமைந்ததை நினைந்து நான் மிகுந்த சந்தோஷப்படுகிறேன். சாமானியன் படத்தில் சில குறைகள் இருந்திருக்கலாம், ஏனென்றால் விளம்பரம் சரியாக பண்ணல. இப்படத்தின் தயாரிப்பாளர் ஆபரேஷன் சக்சஸ் என்று கூறிவிட்டு நோயாளியை கொன்று விட்டார்.

சாமானியன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் போதிய விளம்பரம் கொடுக்க முன்வரவில்லை. விளம்பரப்படுத்தினால் தான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். இல்லையென்றால் எப்படி வருவார்கள். அதனையும் மீறி வருவார்கள் என்றால் ராமராஜனுக்காக தான். அந்த காலத்தில் 100 நாள் படம் ஓடினால் பெரிய விசயம், ஆனால் இந்த காலம் 10 நாள் ஓடினாலே பெரிய விசயம். அப்படி மாறிவிட்டது. இந்த ராமராஜனை மக்கள் இன்றும் மறக்காமல் இருக்கிறார்கள் என்றால் இசைஞானி இளையராஜா தான் காரணம். இளையராஜாவை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. கரகாட்டக்காரன் மீண்டும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget