மேலும் அறிய

SalmanKhan Bullet Proof Car: அடுத்தடுத்து கொலை மிரட்டல்.. சொகுசான புல்லட் ஃப்ரூப் காரை வாங்கிய நடிகர் சல்மான் கான்

அடுத்தடுத்து வந்த கொலை மிரட்டல் காரணமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான், புதிய விலையுயர்ந்த புல்லட் ஃப்ரூப் காரை வாங்கியுள்ளார்.

அடுத்தடுத்து வந்த கொலை மிரட்டல் காரணமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான், புதிய விலையுயர்ந்த புல்லட் ஃப்ரூப் காரை வாங்கியுள்ளார். அதன்படி, நிஸ்ஸான் எஸ்யுவி மாடலை சேர்ந்த  வெள்ளை நிற காரை அவர் தனதாக்கியுள்ளார். அண்மையில் சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி கோரிய நிலையில், தற்போது சல்மான் கான் புல்லட் ஃப்ரூப் காரை வாங்கியுள்ளார்.

ஒய்-பிளஸ் பாதுகாப்பு:

பல்வேறு தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் காரணமாக, பாலிவுட் நடிகர் சல்மான் கானிற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை மட்டும் நம்பிடாத சல்மான் கான், மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மேற்கொள்ளும்  பயணங்களுக்காக இந்தியாவில் இதுவரை வெளியிடப்படாத நிசான் பாட்ரோல் எஸ்யூவி காரை இறக்குமதி செய்துள்ளார். ஏற்கனவே,  கவசம் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடி கொண்ட கஸ்டமைஸ்ட் டொயோட்டா லேண்ட் குரூஸர் காரை வாங்கிய நிலையில், அதன் மேம்பட்ட வடிவமாக தான் தற்போது நிசான் பாட்ரோல் எஸ்யூவியை வாங்கியுள்ளார்.

காரணம் என்ன?

பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சல்மான் கானுக்கும், அவரது நோய்வாய்ப்பட்ட தந்தைக்கும் மற்றும் பிரபல பாலிவுட் எழுத்தாளர் சலீம் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து வந்த பல்வேறு கொலை மிரட்டல்கள் காரணமாக தான் அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய லாரன்ஸ் பிஷ்னோய், தனது வாழ்க்கையின் லட்சியமே சல்மானை கொல்வது தான் என மீண்டும் அறிவித்தார்.

சல்மான் கானின் அடுத்த திரைப்படம்:

சல்மான் கானின் நடிப்பில் அடுத்ததாக ”கிஸ்ஸி கா பாய், கிஸ்ஸி கா ஜான்” திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. அதைதொடர்ந்து, டைகர் 3 திரைப்படத்திலும், ஷாருக்கான் உடன் சேர்ந்து நடிக்க உள்ள டைகர் vs பதான் திரைப்படத்திலும் சல்மான் கான் நடிக்க உள்ளார். அண்மையில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற பதான் திரைப்படத்திலும் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சல்மான் சொன்ன கருத்து:

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் கான், OTT தளங்களில் இடம்பெறும் மோசமான ஆபாச தன்மை மற்றும் அதிக திரைப்பட தயாரிப்பு செலவுகள் பற்றி தனது கருத்தை தெரிவித்தார். அதன்படி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும் படங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக தயாரிக்கப்படும் உள்ளடக்கங்கள்  நல்லதாக இல்லை. தற்போது ​​​​சில கட்டுப்பாடுகளுடன், விஷயங்கள் சிறப்பாக உள்ளன, ஆனால் முன்பு, எந்த தணிக்கையும் இல்லை, இதனால் ஆபாசமும், மோசமான மொழியும் மற்றும் வன்முறையும் அதிகரித்து இருந்தன” என கவலை தெரிவித்து இருந்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget