Sai Pallavi motivational speech: உடம்ப மறைச்சாதான் நல்ல பொண்ணா? தூக்கி எறியுங்கள் - சாய் பல்லவி சொல்வது என்ன?
நான் உடம்பை மறைத்து துணி போடுவதால் நான் நல்ல பொண்ணு என்றும் வேறு ஒரு பெண் மாடர்ன் அவுட் ஃபிட் அணிவதால் அவர் கெட்ட பொண்ணு என நினைப்பது மிகவும் தவறான ஒரு விஷயம்.
2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சராக தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கார்கி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
உடையை பார்க்காதீர்கள் உள்ளதை பாருங்கள் :
நடிகை சாய் பல்லவி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பெண்கள் உடை பற்றி அவரின் கருத்துக்களை மிகவும் வெளிப்படையாக தெரிவித்தார். "நான் உடம்பை மறைத்து துணி போடுவதால் நல்ல பொண்ணு என்றும் வேறு ஒரு பெண் மாடர்ன் அவுட் ஃபிட் அணிவதால் அவர் கெட்ட பொண்ணு என நினைப்பது மிகவும் தவறான ஒரு விஷயம். நாளைக்கு எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் குட்டி துணி எல்லாம் போட்டுகொண்டால் அவளுக்கு அது பிடித்து இருக்கிறது, கம்ஃபர்ட்டாக இருக்கிறாள், அவள் இந்த உலகத்தை நம்புகிறாள், யாரும் என்னை தப்பாக பார்க்க மாட்டார்கள், என்னோட அம்மா எப்படி என்னை பாக்குறாங்களோ அப்படி தான் மத்தவங்களும் என்னை பார்ப்பாங்க என அந்த குழந்தை நம்புகிறது. அந்த நம்பிக்கையை நான் உடைக்க விரும்பமாட்டேன். இல்ல நீ இந்த மாதிரி டிரஸ் போடாத, அந்த அங்கிள் உன்னை தப்பா பார்ப்பார், தப்பா நடந்து கொள்வார் என நான் அவளை பயமுறுத்த மாட்டேன்.
View this post on Instagram
காயப்படுத்தி கொள்ளாதே :
மேலும் உடல் பற்றின உணர்வு என்பது ஒன்று உள்ளது. பெண்களின் உடல் என்பது கடவுள் மாதிரி. நீ அதை அப்படி பார்த்து கொள்ள வேண்டும் என பயமுறுத்துகிறார்கள். உடல் என்பது நீ உடுத்தும் துணி மாதிரி என நான் என் குழந்தையிடம் சொல்லி புரிய வைப்பேன். யாராவது உன்னிடம் தப்பாக நடந்து கொண்டால் அதை உனக்குள்ளே எடுத்து கொண்டு உன்னை நீயே காயப்படுத்தி கொள்ளாதே. இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் ஏராளமான பாலின தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையையை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் அதை உன்னுடைய துணி போல நினைத்து எறிந்துவிடு" என்றார் சாய் பல்லவி.
சாய் பல்லவியின் இந்த மோட்டிவேஷனல் ஸ்பீச் இன்றைய குழந்தைகளுக்கு புரிய வைக்கப்பட வேண்டும். ஒரு கெட்ட புத்தி கொண்ட ஒரு மிருகம் குழந்தை என்றும் பார்க்காமல் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் போது அந்த குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு மனநல சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். இதற்கு மிகவும் சிம்பிளான ஒரு உதாரணத்தை கொடுத்த சாய் பல்லவியின் பேச்சு பாராட்டிற்குரியது.