Sai Pallavi Bollywood Entry : சீதா தேவியாக சாய் பல்லவி.. அதுவும் இப்படியா? விறுவிறுக்கும் சஸ்பென்ஸில் நெட்டிசன்கள்..
டோலிவுட் முன்னணி தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் பாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் 'ராமாயணம்' திரைப்படத்தில் சீதாவாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் சாய் பல்லவி.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவியின் பாலிவுட் என்ட்ரி குறித்து இணையத்தில் பரவும் தகவல்களால் அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.
டோலிவுட் முன்னணி தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் பாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படம் 'ராமாயணம்'. இந்த செய்தி ஏற்கனவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்தாலும் நெட்டிசன்கள் ஆர்வத்தை மேலும் தூண்டியது சாய் பல்லவியின் பாலிவுட் என்ட்ரி.
They are coming to grace the screens with the biggest film ever as RAM & SITA.#RanbirKapoor #SaiPallavi #Ramayana pic.twitter.com/SvqHVZvBtw
— souvIK. (@_xsouvIK) December 4, 2022
சாய் பல்லவி பற்றி கிசுகிசு :
ஏற்கனவே வெளியான தகவலின் படி ஹிருத்திக் ரோஷன் ராவணனாகவும், ரன்பீர் கபூர் ராமனாகவும் நடிக்க தீர்மானிக்கப்பட்டு அவர்களும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவரான நடிகை சாய் பல்லவி சினிமாவில் இருந்து விலகுவதாகவும் இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை என்றும் மருத்துவ துறையில் ஈடுபட உள்ளார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தற்போதய தகவலின்படி சாய் பல்லவி ராமாயணம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடங்கும் படப்பிடிப்பு:
ஏற்கனவே ராமாயண கதையை மையமாக வைத்து 'ஆதிபுருஷ்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் பிரபாஸ், சயீப் அலிகான், கீர்த்தி சனோன் நடித்து வருகிறார்கள். இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்னரே டோலிவுட் தயாரிப்பாளரான அல்லு அர்ஜுன் ராமாயணம் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி மொழியில் எடுப்போம் என தெரிவித்ததை பின்வாங்காமல் தற்போது படத்தின் வேலைகளை துவங்கி விட்டனர்.
படப்பிடிப்பு செப்டம்பர் 2023ல் தொடங்கும் என அறிவித்த நிலையில் கரீனா கபூர் மற்றும் தீபிகா படுகோனே, சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அணுகப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடிகை சாய் பல்லவியை சீதாவாக பார்க்கவே ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள்.
Ranbir Kapoor, Hrithik Roshan and Sai Pallavi starrer Ramayana to begin shooting from September 2023, Producer Madhu Mantena confirms#RanbirKapoor #Ramayana pic.twitter.com/fHUnXTDCJi
— Ranbir Kapoor Universe (@RanbirKUniverse) December 4, 2022
சீதாவின் கண்ணோட்டத்தில் இருந்து ராமாயணம் திரைப்படம் பாலிவுட்டில் உருவாக உள்ளதால் அதற்காக ஏராளமான ஹோம் ஒர்க் மற்றும் டெடிகேஷன் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அவசியம் தேவை என்பதால் கரீனா இப்படத்தில் நடிக்க தனது ஊதியத்தை பல மடங்கு உயர்த்தி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவலுக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.