Jailer 2 : ஜெயிலர் 2 படத்திற்குள் தனுஷை கொண்டு வரும் நெல்சன்...சம்பவம் இருக்கு மக்களே
நெல்சன் திலிப்குமார் இயக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் தனுஷ் சிறப்புத் தொற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் ஜெயிலர். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப்பின் நெல்சன் இயக்கத்தில் வெளியாகிய இப்படத்தின் மேல் பல கேள்விகள் இருந்த. ஜெயிலர் படப்பிடிப்பு தொடக்கத்தின் போதே ரஜினியிடன் விநியோகஸ்தர்கள் இயக்குநரை மாற்ற சொன்னதாக ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் ரஜினி தெரிவித்தார். ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் சுமாரான ஓட்டம் ஓடினால் போதும் என்கிற எதிர்பார்ப்பே இருந்தது. ஆனால் அனைவரது எதிர்பார்ப்புகளையும் மீறி ஜெயிலர் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. நெல்சனின் டார்க் காமெடி , அனிருத்தின் இசை , ரஜினியின் ஸ்டைல் இந்த படத்தை ஒரு பக்கா கமர்ஷியல் படமாக செதுக்கியிருந்தார் நெல்சன். கூடுதலாக மோகன்லால் , ஷிவராஜ்குமார் ஆகிய நடிகர்களின் கேமியோ இப்படத்திற்கு மற்ற மொழி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்று தந்தது.
ஜெயிலர் 2 படத்தின் தனுஷ் ?
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்திற்கான திரைக்கதையை எழுதி வருகிறார் நெல்சன் . இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் , மிர்ணா , மோகன்லால் , ஷிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூடுதலாக சில நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஜெயிலர் 2 படத்தில் நடிகர் தனுஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமே. ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். தனுஷூக்கு இருந்த அதிகப்படியான கமிட்மெண்ட் காரணமாக இந்த படம் தாமதமாகிக் கொண்டே போனது.
மேலும் ஜெயிலர் முதல் பாகம் பெரியளவில் வெற்றிபெற்றதால் இரண்டாம் பாகம் மீது ரசிகர்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் தனுஷ் மாதிரியான நடிகர் உள்ளே வருவது படத்திற்கு பெரிய பிளஸ்தான்.
கூலி
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜ் , உபேந்திரா , நாகர்ஜூனா , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சன் பிக்ச்சர்ஸ் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தின் ரிலீஸூக்குப் பின்பே ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.