RRR success in Japan : ஜப்பானிலும் வசூலை தட்டித்தூக்கிய ஆர்ஆர்ஆர்... மூன்றே வாரத்தில் சாதனை படைத்த முதல் இந்திய படம்..
ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியிடப்பட்டது. 17 நாள் முடிவில் 1,22,727 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு 10 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சியின் அடையாளமாக சமீபகாலமாக சில திரைப்படங்கள் சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் உலக அளவில் நமது இந்திய சினிமாவை பெருமைப்படுத்தியுள்ளது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம். சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையாக வைத்து படமாக்கப்பட்ட இந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகளவில் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
கற்பனை கதை :
அல்லூரி சீதா ராமராஜு மற்றும் கொமரம் பீம் எனும் சுதந்திர போராட்ட வீரர்களான இவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கற்பனை கதையாக உருவாக்கப்பட்ட இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஒலிவியா மாரிஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த இந்த மாபெரும் வீரர்கள் ஒன்றாக சந்தித்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு கற்பனையாக படமாகியது தான் ஆர்ஆர்ஆர் திரைப்படம்.
#RRR has made India proud again! The film has collected over 185Million ¥ in just 3 weeks of it’s release in Japan pic.twitter.com/6mQFBDlpzj
— Ramesh Bala (@rameshlaus) November 8, 2022
ஜப்பானிய ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஆர்ஆர்ஆர்:
நமது இந்திய பெருமையை பறைசாற்றிய இந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பான் திரையரங்குகளில் அவர்களது மொழியான ஜாப்பனிஷ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படத்திற்காக அங்கும் புரொமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சிகளில் இயக்குனர் ராஜமௌலியுடன் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணும் கலந்து கொண்டனர். ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் குறைந்த அளவிலான பார்வையாளர்களை மட்டுமே பெற்றாலும் மூன்றாம் வாராதில் கிட்ட தட்ட 13 லட்சம் ஜப்பானிய பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது நமது இந்திய சினிமா என்பது நம் கண்களை விரிய செய்கிறது.
17 நாள் முடிவில் ஜப்பானில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது எனும் தகவல் இன்று வெளியாகியுள்ளது. இது ஜப்பானிய பணத்தின் மதிப்பீட்டில் 185 மில்லியன் யென் வசூலித்துள்ளது. இந்த 17 நாட்களில் மட்டும் 1,22,727 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெறுகிறது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.
#RRR has made India proud again! The film has collected over 185Million ¥ in just 3 weeks of it’s release in Japan pic.twitter.com/6mQFBDlpzj
— Ramesh Bala (@rameshlaus) November 8, 2022