RRR In Japan : ஜப்பான் நாட்டையும் விட்டு வைக்காத ஆர்.ஆர்.ஆர். படம்... உலகளவில் சக்கைபோடு போடும் பான் இந்தியா படம்..!
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்(RRR) திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஜப்பானில் ஓடிக்கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் வெளியாகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், ஜப்பானில் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியானது. தற்போது அந்த படம், சுமார் 2.50 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், ஒலிவியா மோரிஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். கடந்த மார்ச் 25ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் சாதனை செய்தது.
View this post on Instagram
அதன் பின்னர் கடந்த மே 20ஆம் தேதி ஓடிடியில் வெளியாகி அங்கு பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பல மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில், ஜப்பானில் அந்நாட்டு மொழியில் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று வெளியானது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக, ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஜப்பானுக்கு சென்றனர்.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படம், போட்டி போட்டுக்கொண்டு பல விருதுகளை குவித்து வருகிறது. 50 வது சாட்டர்ன் விருதுகளில் ’ஆர்.ஆர்.ஆர்' சிறந்த சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது.
#RRRInJapan has grossed 44 Million Yen [ ₹ 2.50 Crs] and at No.10 in Top 10 Charts.. Oct 20th - 23rd..
— Ramesh Bala (@rameshlaus) October 27, 2022
பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்(RRR) திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஜப்பானில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நாட்டில் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான இப்படம், ரிலீஸ் ஆன தேதி முதல் அக்டோபர் 23 வரை சுமார் 2.50 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவானது என்பது குறிப்பிடதக்கது.