மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரத்தில் படப்பிடிப்பு! - சேலையில் அம்சமாக வந்த நயன்தாரா! காணக் குவிந்த மக்கள்!
காஞ்சிபுரம் ஜூரகேஸ்வரர் திருக்கோவிலில் நடிகை நாயன்தாரா வைத்து நடைபெற்று வரும் படப்பிடிப்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ளது ஜீரகேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் மாதவன் நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் இறுதி கட்டப் படபிடிப்பு இத்திருகோயிலில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள திரைப்பட உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா காட்சிகள் படப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த அப்பகுதி ரசிகர்கள் பொதுமக்கள் என பலர் நயன்தாராவை காண அப்பகுதியில் குவிந்ததால் சற்று போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.
இந்நிலையில் திருக்கோயிலில் இருந்து வெளியேறிய நயன்தாராவை காவல்துறையினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் பத்திரமாக கேரவன் வாகனத்திற்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர். மேலும் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றதால் காவல்துறை உடனடியாக அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஏகாம்பாநாதர் திருக்கோயிலுக்கான பல்வேறு மாநில மற்றும் தமிழக மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில் இதனை அறிந்து அவர்களும் உடனடியாக பகுதிக்கு வந்த நிலையில் அவர்களை காவல்துறையும் ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே நயன்தாரா படப்பிடிப்பு காட்சிகள் முடித்துவிட்டு கோயிலில் இருந்து கேரவனுக்கு செல்லும் முன் ரசிகர்களை பார்த்து கைகாட்டிவிட்டு சென்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion