Watch Video | என்னோட ரோல் மாடல் யாரு தெரியுமா? ரோஜா சொல்லும் மோட்டிவேஷன் சீக்ரெட்..
படையப்பா படத்தில் இடம்பெற்ற சுத்தி சுத்தி வந்தீக பாடலின் தெலுங்கு வெர்ஷனுக்கு நடனமாடி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகம் பேரை கவர்ந்த ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியலின் கதாநாயகியாக நடிகை பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா ‘அந்தாரி பந்துவையா’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து நா சாமி ரங்கா, ஹைப்பர் ,நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
தெலுங்கு படங்கள் மட்டுமின்றி ‘மேகமாலா’ மற்றும் ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய 2 தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார். பிறகு தமிழில் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தார். அதன் பின்னர், காஞ்சனா 3 படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தார்.
View this post on Instagram
தற்போது, ரோஜா சீரியல் மூலம் பரவலாக தெரிய ஆரம்பித்திருக்கும் பிரியங்கா தமிழ் சீரியல் கதாநாயகிகளில் டாப் ஹீரோயினாக இருக்கிறார். ரோஜா சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சம்பாதித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.
View this post on Instagram
அந்தவகையில் தனது குடும்பத்துடன் காஷ்மீர் சென்ற பிரியங்கா அங்கு எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். காஷ்மீர் டூரை முடித்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியிருக்கும் ரோஜா, படையப்பா படத்தில் இடம்பெற்ற சுத்தி சுத்தி வந்தீக பாடலின் தெலுங்கு வெர்ஷனுக்கு நடனமாடி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது ரோல் மாடல் சௌந்தர்யா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பிரியங்காவின் வீடியோவுக்கு ரசிகர்கள் அதிகளவு லைக்ஸும், ஹார்ட்டின்களும் கொடுத்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்