'இத ஏத்துக்க முடியாது...' ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் ஆடிய மனைவியை விமர்சித்து தாக்குதல்
மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியது சமூக வலைதளத்தில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் இறப்பு தமிழ் திரையுலகின் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிமிக்ரி கலைஞனாகவும் , நகைச்சுவை நடிகராகவும் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்த ரோபோ சங்கர் தீவிர மதுப்பழக்கத்தால் உடல் நலக் குறைவால் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார். சின்னத்திரை நடிகர்கள் முதல் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ரோபோ சங்கரின் இறப்பு அவரது குடும்பத்தினரிடம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ரோபோவிடம் அவரது மனைவி மற்றும் மகள் கதறி அழுத வீடியோக்கள் பார்ப்போரை கலங்கவைத்துள்ளன.
கணவரின் இறுதி ஊர்வலத்தில் ஆடிய பிரியங்கா சங்கர்
ரோபோ சங்கரின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் அவரது வீட்டில் இறுதி அஞ்சலி செல்துதப்படுவதற்காக வைக்கப்பட்டது. கமல்ஹாசன் , சிவகார்த்திகேயன் , தனுஷ் , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா அழுதபடியே ஆடி தனது கணவரை வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ பலரை மனமுருக செய்தது. அதே நேரத்தில் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ஆடிய பிரியங்காவை சில கலாச்சார காவலர்கள் விமரிசிக்க தொடங்கியுள்ளார்கள்.
"எத்தனை சப்பைகட்டு கட்டினாலும் மனைவி இப்படி ஆட்டம் போட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது ' என ஒரு எக்ஸ் தள பயன்பாட்டாளர் பதிவிட்டுள்ளார்.
என் புருஷனுக்கான கடைசி ஆட்டம்!.
— Thangaraj Suriyavel 🚩 (@ithanagaraj) September 19, 2025
ரோபோ சங்கர் மனைவி..
எத்தனை சப்பைகட்டு கட்டினாலும், ஒரு மனைவி என்ற முறையில், ஆட்டம் போட்டதை ஏற்று கொள்ள மனம் ஒப்பவில்லை... pic.twitter.com/TRUyb7O0gF
ரோபோ சங்கர் மனைவி ஆடியதைப் பார்க்க அருவருப்பாக இருப்பதாக மற்றொருவர் பதிவிட்டுள்ளார்
ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி டான்ஸ் ஆடி கணவனை இறுதி வழியனுப்பி வைத்த விடியோ பார்க்கையில் அருவருப்பா தெரிகிறது
— தடா ஜெ ரஹிம் 🇮🇳 (@tadarahim_offic) September 19, 2025
என் பார்வைக்கு மட்டுமே இப்படி தெரிகிறதா இல்லை மற்றவங்க பார்வைக்கும் அப்படியே தெரிகிறதா என தெரியவில்லை..
யூடியூப் மூலம் வருமானம் ஈட்ட இந்த நடனமா கலியுகமடா pic.twitter.com/biXrPvQNoo
ரோபோ சங்கர் மனைவியை விமர்சிப்பவர்களுக்கு ஒன்று இங்கு சொல்ல வேண்டும். ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி பிரியங்கா இருவருமே மதுரையில் குரூப் டான்ஸராக இருந்தவர்கள். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நடன நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலக்கியவர்கள். ஒரு நடன கலைஞனுக்கு அவனது மனைவி நடனமாடி வழியனுப்புவதை வித சிறப்பான விடைகொடுத்தல் இருக்கமுடியுமா





















