முந்திரி கொட்டை மாதிரி வந்து... வாங்கிக் கட்டிக் கொண்ட ரோபோ ஷங்கர்!
Arrtham movie press meet: அர்த்தம் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இது ஒரு ஹாரர் திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
Watch Video : "அர்த்தம்" படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது...ஹீரோயின் கொடுத்த அப்டேட்
துரு துரு பார்வை, கலகலப்பான பேச்சு கொண்ட குழந்தை நட்சத்திரமாக நமக்கு மிகவும் தெரிந்த ஒரு முகம் மாஸ்டர் மகேந்திரன். தற்போது பல படங்களில் நடித்து முன்னணி கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குனர் மணிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "அர்த்தம்". இப்படத்தில் ஹீரோவாக நடிகர் மகேந்திரன் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா தாஸ் நடிக்கிறார். இவர் தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி மொழி படங்களில் 40ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஷ்ரத்தா தாஸ் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது தான். "அர்த்தம்" திரைப்படத்தின் டீசர் வெளியாவதை அடுத்து படக்குழுவினர் ஒரு பிரஸ் மீட்டில் பங்கேற்றனர்.
பத்திரிகையாளர்களை கடுப்பேத்திய ரோபோ ஷங்கர் :
பிரஸ் மீட்டில் படத்தின் நாயகி ஷ்ரத்தா தாஸ் பேசுவகையில் எனக்கு தமிழ் சுத்தமாக தெரியாது என்று ஆங்கிலத்தில் உரையாடினார். அதை கேட்டதும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரோபோ ஷங்கர் அருகில் வந்து நான் உங்களுக்காக மொழிபெயர்ப்பு செய்கிறேன் என்றார். ஹீரோயின் பேசுவதை மொழிபெயர்ப்பு செய்ய வந்தார் ரோபோ ஷங்கர். அப்போது கடுப்பான பத்திரிகையாளர்கள் எங்கள் அனைவர்க்கும் ஆங்கிலம் புரியும் அதனால் நீங்கள் பொய் உட்காருங்கள் என்று கூறிவிட்டனர். கடுப்பான ரோபோ ஷங்கர் அங்கு இருந்து சென்று விட்டார்.
பர்ஃபார்மன்ஸ் சார்ந்த கதாபாத்திரம்:
மேலும் பிரஸ் மீட்டில் பேசிய நடிகை ஷ்ரத்தா தாஸ் தான் இதுவரையில் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளேன். பெரும்பாலும் பர்ஃபார்மன்ஸ் குறைவாகவும் கிளாமர் அதிகமாகவும் உள்ள திரைப்படங்களில் தான் நடித்துள்ளேன். ஆனால் பர்ஃபார்மன்ஸ் முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நான் இயக்குனருக்கு நன்றி கூறுகிறேன் என்றார். மேலும் மகேந்திரன் போல திறமையான ஒரு நடிகருடன் ஒரு ஹாரர் படத்தில் நடிக்க என்னுடைய சிந்தனையை எக்ஸ்ப்ரஷன் அனைத்தையும் மிகவும் கன்ட்ரோலில் வைத்து கொள்ள வேண்டி இருந்தது. படத்தில் நான் மனநல மருத்துவராக நடிக்கிறேன். நான் ஒரு சைகாலஜி மற்றும் ஜர்னலிசம் பட்டதாரி என்பதால் எனக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதாக இருந்தது என்றார் ஷ்ரத்தா தாஸ்.
View this post on Instagram
அர்த்தம் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இது ஒரு ஹாரர் திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.