மேலும் அறிய

Kantara Update: ”காந்தாரா” படத்தின் இரண்டாம் பாக தலைப்பு வெளியீடு..! ஃபர்ஸ்ட் லுக்கிற்கான தேதியும் அறிவிப்பு

Kantara Update: காந்தாரா திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான தலைப்பை அறிவித்துள்ள படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியையும் அறிவித்துள்ளது.

Kantara Update: காந்தாரா திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கு காந்தாரா - சாப்டர் 1 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காந்தாரா திரைப்படம்:

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம், பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இந்தத் திரைப்படம் இந்தியாவின் தென் கடலோரப் பகுதியிலிருந்து தெய்வீக மற்றும் ஆத்மார்த்தமான கதையைக் கொண்டு வந்து பெரும் கவனம் ஈர்த்தது. இதையடுத்து, அப்படத்தில் இடம்பெற்ற கதைக்களத்திற்கு முந்தைய காலகட்டங்களில், நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு ஒரு படம் உருவாக்கப்படும் என படக்குழு அறிவித்தது. அதனடிப்படையில், காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. தெய்வீக கதையை மையமாக கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம், கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தாரா திரைப்பட அப்டேட்:

இதுதொடர்பாக படத்தை தயாரிக்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,கடந்த காலத்தின் புனிதமான எதிரொலிகளுக்குள் நுழையுங்கள், அங்கு ஒவ்வொரு இடத்திலும் தெய்வீகம் பின்னி இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாததைக் காண மயங்கி இருங்கள். இது ஒளி அல்ல, தரிசனம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இடம்பெற்றுள்ள போஸ்டரில், ”காந்தாரா A LEGEND CHAPTER" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 27ம் தேதியன்று நண்பகல் 12.25 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்குவதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

படம் பற்றிய கூடுதல் தகவல்:

இப்படத்திற்காக பிரமாண்டமான செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வரும்  27 ஆம் தேதி அன்று 'காந்தார அத்தியாயம் 1' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதன்பிறகு டிசம்பர் மாதத்தில் இருந்து தீவிர படப்பிடிப்பு தொடங்கும். படத்தில் இடம்பெறும் நடிகர் மற்றும் நடிகைகளின் விவரங்கள், பின்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கேஜிஎஃப் திரப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள 'சலார்: பார்ட் 1 போர்நிறுத்தம்' மூலம் பார்வையாளர்களை ஒரு அதிரடி பயணத்தில் அழைத்துச் செல்ல ஹோம்பலே பிலிம்ஸ் தயாராக உள்ளது. இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Immortal Review : ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் நடித்துள்ள இம்மார்டல் பட விமர்சனம்
Immortal Review : ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் நடித்துள்ள இம்மார்டல் பட விமர்சனம்
50 நாட்கள் வெற்றி... ‘கட்டா குஸ்தி 3’ குறித்து விஷ்ணு விஷால் சொன்ன முக்கிய தகவல்!
50 நாட்கள் வெற்றி... ‘கட்டா குஸ்தி 3’ குறித்து விஷ்ணு விஷால் சொன்ன முக்கிய தகவல்!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Embed widget