”டிஸ்னிலேண்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹாலிவுட் பிரபலம்”: காரணம் இதுதான்
வில்சனும் அவரது காதலி ரமோனாவும் நிச்சயம் செய்துகொண்டு மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் ஆன்லைனில் வைரலாகப் பரவின.
நடிகர் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நடிகர் ரிபல் வில்சன் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அண்மையில் தி டெய்லி ஷோவில் தோன்றிய ரிபல் தான் டிஸ்னிலேண்டில் நுழையத் தடைவிதிக்கப்பட்ட சுவாரசியமான சம்பவம் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.
இதுவரை ட்ரெவர் நோவா என்பவரால் தொகுத்து வழங்கப்பட்டு வந்த சூப்பர் ஷோவான தி டெய்லி ஷோவை தற்போது நகைச்சுவைக் கலைஞர் ஹசன் மினாஜ் தொகுத்து வழங்கி வருகிறார். அவரது ஷோவில் அண்மையில் பங்கேற்ற ரிபல் வில்சன் தனக்கு டிஸ்னிலேண்டில் தடைவிதிக்கப்பட்ட சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
தி டெய்லி ஷோவின் புதிய எபிசோடில் பங்கேற்ற 43 வயதான ரிபல் வில்சன், டிஸ்னியில்தான் எடுத்த புகைப்படம் ஒன்றுக்காக அங்கிருந்து 30 நாட்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டது குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
"டிஸ்னிலேண்டிற்குள் உள்ள ஒரு ரகசிய குளியலறையில் நான் செல்ஃபி புகைப்படம் எடுத்தேன், இது சட்டவிரோதமானது.மேலும் அதனால் அங்கே நுழைய எனக்கு அதிகாரப்பூர்வமாக 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது," என்று வில்சன் பகிர்ந்து கொண்டார்.
"செல்பியை பார்த்துவிட்டு டிஸ்னிலேண்டில் இருந்து என்னைத் தொடர்புகொண்டார்கள். “நீங்கள் திரைப்பட ஷெட்யூலில் பிஸியாக இருக்கும் ஒருமாதத்தை எங்களுக்குச் சொல்லுங்கள் அந்த மாதத்தில் நீங்கள் டிஸ்னிக்குள் நுழைய வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டனர். 'ஓ ஓகே அப்போ ஜூன் மாதம் சரியா இருக்கும்” என நான் அவர்களுக்கு பதில் அளித்தேன் என்கிறார் ரிபல் வில்சன்.
இதற்கு பதிலளித்த மினாஜ் “ஒரு பிரபலம்னா இப்படித்தானே!” எனப் பகடி செய்தார்
View this post on Instagram
ரிபல் வில்சன் அண்மையில்தான் டிஸ்னியில் தனது பார்ட்னர் ரமோனா அக்ரூமாவுக்கு ப்ரபோஸ் செய்தார். கடந்த மாதம் தி ட்ரூ பேரிமோர் ஷோவில் ஒரு நேர்காணலில் இதற்காகத் தான் டிஸ்னி தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகரை அழைத்த அனுமதி கேட்டது குறித்தும் பகிர்ந்துகொண்டார் வில்சன்.
View this post on Instagram
டிஸ்னியின் பேண்டஸி உலகத்தில் பீச் ப்ளாஸம் மலர்களுக்கு இடையே வில்சனும் அவரது பார்ட்னர் ரமோனாவும் நிச்சயம் செய்துகொண்டு மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் ஆன்லைனில் வைரலாகப் பரவின. அதில் இருவரும் டிஸ்னி தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகருக்கு நன்றி தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.