Ravi Mohan :12 ஆண்டுகளுக்குப் பின் பராசக்தியில் வில்லனாக ரவி மோகன்...ஆன் ஸ்கிரினில் தாக்குபிடிப்பாரா எஸ்.கே?
Parasakthi : ஆதிபகவன் படத்திற்கு பின் 12 ஆண்டுகளுக்குப் பின் பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளதும் பராசக்தி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பிற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்

பல்வேறு போராட்டங்களுக்குப் பின் பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. சிவகார்த்திகேயன் 25 ஆவது திரைப்பட்ம என்பதை தவிர்த்து பராசக்தி படத்தைப் பார்ப்பதறு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. 12 வருடங்களுக்குப் பின் ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பதும் ஒரு முக்கிய காரணம். ஆதிபகவன் படத்தில் பகவன் கதாபாத்திரத்தில் ரவி மோகனின் நடிப்பை பார்த்தவர்களுக்கு தெரியும் பராசக்தி படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்று.
பராசக்தி தணிக்கை சான்றிதழ்
இந்த பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய இரு படங்கள் வெளியாக இருந்தன. இப்படியான நிலையில் விஜயின் ஜனநாயகன் சென்சார் சிக்கலால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டாமல் இருந்த நிலையில் இந்த பொங்கலுக்கு ஏமாற்றம்தானா என ரசிகர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இப்படியான நிலையில் தான் பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆசுவாசம் கிடைத்துள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி நாளை ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது பராசக்தி திரைப்படம். டான் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா , ஶ்ரீலீலா , ரவி மோகன் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 1960 களில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்காரா. பராசக்தி படத்திற்கு இன்று மத்திய தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தி மொழிக்கு எதிராக படத்தில் இருந்த 23 காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
12 ஆண்டுகளுக்குப் பின் வில்லனாக ரவி மோகன்
ஜனநாயகன் வெளியாகாததால் இந்த பொங்கலுக்கு பராசக்தி திரைப்படம் தனியாக நின்று வசூலை குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிவகார்த்த்கேயனின் 25 ஆவது படம் , படம் பேசும் அரசியல் ஆகியவற்றை கடந்து இந்த படத்தைப் பார்ப்பதற்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. 12 வருடங்களுக்கு பின் ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அமீர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான ஆதி பகவன் படத்தில் ரவி மோகன் இரட்டை வேடத்தில் நடித்து பகவன் என்கிற வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். வில்லனாக மட்டுமில்லாமல் திருநங்கையாகவும் நடித்திருந்தார். படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் ரவி மோகனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது பராசக்தி படத்திலும் வில்லனாக ரவி மோகன் தனது உச்சபட்ச நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என எதிர்பார்க்கலாம்
தாக்குபிடிப்பாரா சிவகார்த்திகேயன்
தொடர்ச்சியாக சவாலான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் சிவகார்த்திகேயன். மாவீரன் படத்தில் ஒரே நேரத்தில் காமெடியாகவும் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்தார். அமரன் படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். மதராஸி படத்தில் ஆக்ஷனில் இன்னும் ஒரு படி மேலே சென்றார். தற்போது ஃபேமிலி ஆடியன்ஸ் விரும்பும் விதமான கதாபாத்திரமாக பராசக்தி படத்தில் நடித்துள்ளார். ஆனால் சீனியர் நடிகரான ரவி மோகனின் நடிப்பின் முன் எஸ்கே தாக்குபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .





















