மேலும் அறிய

Chiyaan 61: ராஷ்மிகாவை ஓரங்கட்டிவிட்டு மாளவிகா மோகனை ஒப்பந்தம் செய்த பா. ரஞ்சித்... இது தான் காரணம்

ராஷ்மிகா மந்தனாவை ஒதுக்கி விட்டு மாறன், மாஸ்டர் படங்களில் தனுஷ், விஜய் ஜோடியாக நடித்த மாளவிகா மோகன் சியான் 61 திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படம் விமர்சன ரீதியாக அமோகமான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் மற்றுமின்றி திரை பிரபலங்கள் மத்தியிலும் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பா. ரஞ்சித் சியான் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.  

Chiyaan 61: ராஷ்மிகாவை ஓரங்கட்டிவிட்டு மாளவிகா மோகனை ஒப்பந்தம் செய்த பா. ரஞ்சித்... இது தான் காரணம்

பா. ரஞ்சித் இயக்கும் சியான் 61 :

சியான் விக்ரம் நடிப்பில் "கோப்ரா" மற்றும் "பொன்னியின் செல்வன் 1" என  அடுத்தடுத்து படங்களில் வெளியாகி நடிகர் விக்ரமின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. பொன்னியின் செல்வன் 1 படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரமின் நடிப்பு சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த வெற்றியை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் இணைய உள்ளார் என்ற தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படத்திற்கு சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை பற்றிய கதை என தகவல்கள் கூறுகின்றன. தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு பின்னர் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும். இந்த பான் - இந்திய திரைப்படம் 2டி மற்றும் 3டியில் உருவாக்கப்பட உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படம் 2023ல் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

படப்பிடிப்பு கடப்பாவில் தொடங்கியது :

சியான் 61 படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா பகுதியில் இன்று தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து மதுரையில் நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரம் பைனல் லுக் குறித்த டெஸ்டிங் சென்னையில் நடைபெற்றது. கூடிய விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தின் ஹீரோயின் யார் : 

சியான் 61 படத்தில் நடிகர் விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின ஆனால் அவர் நடித்து வரும் மற்ற படங்களின் டேட்ஸ் உடன் ஒத்துவராததால் இப்படத்தில் அவர் நடிக்க முடியவில்லை என விலகி கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பதிலாக சியான் விக்ரம் ஜோடியாக மாளவிகா மோகன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிறது தகவல். இவர் ஏற்கனவே பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் விஜய் உடன் ஜோடி சேர்ந்த நடிகை தற்போது சியான் விக்ரமுடன் ஜோடி சேர உள்ளார்.    

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget