Rashmika Mandanna: நாய்க்கு ஃப்ளைட் டிக்கெட் கேட்டேனா..? செய்தி வெளியிட்ட நிறுவனத்தை துவம்சம் செய்த ராஷ்மிகா..!
விமானத்தில் தனது நாய்க்கும் சேர்த்து ராஷ்மிகா டிக்கெட் கேட்டதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
விமானத்தில் தனது நாய்க்கும் சேர்த்து ராஷ்மிகா டிக்கெட் கேட்டதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ராஷ்மிகா, “ ஹே கமான்.. இவ்வளவு மோசமாக நடந்து கொள்வீர்கள். ஆரா என்னுடன் பயணிக்க வேண்டும் என்று விரும்பினால் கூட, அவள் எல்லா இடங்களுக்கும் என்னுடன் வரவிரும்புவதில்லை. உங்கள் அக்கறைக்கு நன்றி. மன்னித்து விடுங்கள். இந்த நாள் உங்களால் மகிழ்ச்சிகரமானதாக மாறியிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
🤣🤣🤣🤣🤣 hey c’mon.. don’t be mean now..🥲 even if you want AURA to travel with me.. SHE doesn’t want to travel around with me..🤣🤣 she’s very happy in Hyderabad..🥲🥲 thankyou for your concern @Mirchi9 ❤️ https://t.co/c2RTL9I2kG
— Rashmika Mandanna (@iamRashmika) June 24, 2022
பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடன் சேர்த்து தனது நாய்க்கும் விமான டிக்கெட் கேட்டதாகவும், அவர் அவரது நாயை விட்டு என்றுமே பிரிவதில்லை என்றும் செய்தி வெளியிட்டது. இந்தப்பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த ராஷ்மிகா, மேற்குறிப்பிட்ட பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
ராஷ்மிகா நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜயின் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இந்தப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பூ உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் போஸ்டர் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.