Rashmika Mandanna: அடேங்கப்பா இத்தன வீடா? மாஸ்டர் பிளான் பக்காவா இருக்கே...! ராஷ்மிகாவின் கூல் ரியாக்ஷன்..!
குறுகிய காலத்திலேயே 5 மாநிலங்களில் 5 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை ராஷ்மிகா மந்தனா வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக வளர்ந்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா. சினிமா துறையில் அடியெடுத்து வைத்தது என்னவோ 2016ம் ஆண்டு தான் ஆனால் அதற்குள் பான் இந்திய நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.
ஒரே ஆண்டில் 5 படங்களா?
'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்தது தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படத்திற்கு பிறகே. அவரின் கொஞ்சல் பேச்சு, அழகான முகம், வசீகரமான தோற்றம், களங்கம் இல்லாத சிரிப்பை வைத்து ரசிகர்களை கிளீன் போல்ட் செய்துவிட்டார். தற்போது மிகவும் பிஸியான நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 5 திரைப்படங்களில் நடித்து விடுகிறார்.
View this post on Instagram
ஐ டோன்ட் கேர் :
சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ராஷ்மிகா விதவிதமான போஸ்ட் போடுவது வழக்கம். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் அவரை ட்ரோல் செய்வதும் மீம்ஸ் மூலம் கலாய்ப்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் அவை எதை பற்றியும் கவலை இல்லாமல் தனது வேலையில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் ராஷ்மிகா.
அடுத்தடுத்து ஹிட் படங்கள் :
சமீபத்தில் நடிகர் விஜய் ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டில் அல்றே அடி இரண்டு திரைப்படங்களில் நடித்து அவை வெளியானதை தொடர்ந்து 'அனிமல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பார்ட் புஷ்பா 2விலும் நடிக்க உள்ளார். இப்படி பிஸியான ஷெட்யூல் போட்டு நடித்து வரும் ராஷ்மிகா குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி வாய் பிளக்க வைத்துள்ளது.
#Rashmika owns 5 luxurious apartments in 5 places🤨#RashmikaMandanna 🔥 pic.twitter.com/9zHBwvPU37
— Nerdy News (@NerdyNews07) February 10, 2023
🥲🥲I wish it were true
— Rashmika Mandanna (@iamRashmika) February 10, 2023
இத்தனை வீடுகளா ?
நடிகை ராஷ்மிகா மந்தனா ஹைதராபாத், கோவா, மும்பை, பெங்களூரு மற்றும் கூர்க் என 5 மாநிலங்களில் 5 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலுக்கு ராஷ்மிகா "இதெல்லாம் உண்மையாக இருந்தால் நன்றாக தான் இருக்கும்" என ரியாக்ட் செய்தது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. ராஷ்மிகாவின் இந்த பாசிட்டிவ் ரியாக்ஷனை புகழ்ந்து வருகிறார்கள் அவரின் டை ஹார்ட் ரசிகர்கள்.