’அத போய் தீபிகாகிட்ட கேளுங்க...’ - குழந்தை பற்றிய கேள்விக்கு குறும்பாக பதில் சொன்ன ரன்வீர்!
தான் தங்களது வருங்கால குழந்தையின் பெயர் பற்றி தீபிகாவுடன் அடிக்கடி கலந்தாலோசித்து வருவதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் பலராலும் ரசித்து கொண்டாடப்படும் ஜோடி ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி.
கெமிஸ்ட்ரீ டூ காதல் டூ கல்யாணம்
சஞ்சய் லீலா பன்சாலியின் ’ராம்லீலா’ படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்த இவர்களது கெமிஸ்ட்ரி, ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகத்தையும் ரசிகர்களையும் அதிர வைத்தது. படப்பிடிப்பின்போதே காதல் வயப்பட்ட இருவரும் தொடர்ந்து பன்சாலியில், பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி ஆகிய படங்களில் நடித்தனர்.
View this post on Instagram
2018ஆம் ஆண்டு திருமணம் செய்த இந்த ஜோடியை ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகும் வாழ்த்தி மகிழ்ந்தது. தற்போது இவர்கள் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
எப்போ குழந்தை?
இந்நிலையில், எப்போது குழந்தை பெற திட்டமிட்டுள்ளீர்கள் என சமீபத்தில் பத்திரிகையாளர்கள் ரன்வீரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ரன்வீர், ”தீபிகா கான்ஸ் விழா முடிந்து திரும்பியதும் அவரிடமே இதைக் கேளுங்கள்” என தன் வழக்கமான குறும்புடன் தெரிவித்துள்ளார். மேலும் தான் தங்களது வருங்கால குழந்தையின் பெயர் பற்றி தீபிகாவுடன் அடிக்கடி கலந்தாலோசித்து வருவதாகவும் ரன்வீர் தெரிவித்துள்ளார்.
பேர் செல்க்ட் பண்ணிட்டு இருக்கேன்...
”நான் எப்போதுமே தனித்துவமான பெயர்களால் ஈர்க்கப்படுபவன். சில பெயர்கள் சக்தி வாந்தவை, சில க்யூட்டாக இருக்கும். சில பெயர்கள் குட்டியானவையாக இருக்கும்.
View this post on Instagram
நான் எங்களின் வருங்கால குழந்தையின் பெயர் பற்றி தீபிகாவிடம் தனியாக இருக்கும்போது மட்டும் தான் ஆலோசிப்பேன். இந்தப் பெயர்களை நான் ரகசியமான வைத்துள்ளேன். ஏனென்றால் வேறு யாரும் இப்பெயரை உபயோகித்துவிடக்கூடாது” எனவும் தெரிவித்துள்ளார்.
ரன்வீர் சிங் நடிப்பில் அண்டாஸ் அப்னா, அப்னா 2, சர்க்கஸ் ஆகிய படங்கள் விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.