Ranveer Singh: நிர்வாண ஃபோட்டோஷூட்.. விளக்கம் கொடுத்த ரன்வீர் சிங்... மீம்ஸை பறக்கவிடும் கலாட்டா நெட்டிசன்கள்!
நடிகர் ரன்வீர் சிங்கின் சமீபத்திய நிர்வாண ஃபோட்டோஷூட் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான ரன்வீர் சிங் தன் நடிப்பு தாண்டி, ஆஃப் ஸ்க்ரீனில் வெளிப்படுத்தும் உச்சக்கட்ட எனர்ஜியால் நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
நடிப்பு தாண்டி ரன்வீரின் தனித்துவமான உடை அலங்காரம், ஆஃப் ஸ்க்ரீன், சினிமா நிகழ்ச்சிகள், மேன் vs வைல்ட் என அனைத்திலும் அவர் வெளிப்படுத்தும் எனர்ஜி குறும்பு ஆகியவை சமூக வலைதளங்களின் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன.
அந்த வகையில் முன்னதாக ரன்வீர் சிங்கின் நிர்வாண ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
முன்னதாக 1972ஆம் ஆண்டு அமெரிக்காவின் காஸ்மோபோலிட்டன் இதழுக்கு ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் (Burt Reynolds) கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண ஃபோட்டோஷூட்டை நினைவுகூறும் வகையில் ரன்வீர் சிங் இந்த ஃபோட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், ரன்வீர் சிங்கின் துணிச்சலான இந்த முயற்சியை ரன்வீர் சிங்கின் ரசிகர்கள் ஒருபுறம் சமூக வலைதளங்களில் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
மற்றொரு புறம் குறும்பான நெட்டிசன்கள் மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ்பெற்ற ’க்ரியேஷன் ஆஃப் ஆடம்’ உள்ளிட்ட பெய்ண்டிங்குகளில் ரன்வீரை பொருத்தி ட்ரெண்ட் செய்து வருகின்றன.
Fixed it pic.twitter.com/vo473qKHSZ
— Palak🤡 (@Woh_meow_hai) July 21, 2022
The Creation of #RanveerSingh pic.twitter.com/lCpXQApL9g
— Sadman Kabbo (@sadman4kabbo) July 21, 2022
😂 Sorry, I'm not at all here to troll@RanveerOfficial
— Meena Choudhary (@MeenaC48) July 21, 2022
I just found this picture genuinely funny🤣 #ranveerified #ranveersingh pic.twitter.com/xtZh2alnIH
#RanveerSingh
— 𓃵 Ctrl C + Ctrl Memes 45 (@Ctrlmemes_) July 21, 2022
Cockroach when I turn on light at night : pic.twitter.com/pLgyG97aV8
மேலும் ஸ்பைடர் மேனைப் போல் சிலந்தி வலைகளில் ரன்வீர் படத்தைப் பொருத்தியும், நகைச்சுவையான கேப்ஷன்கள் பகிர்ந்தும் நெட்டிசன்கள் களமாடி வருகின்றனர்.