Ranveer Singh : எங்களுக்காக நிர்வாண போஸ் கொடுப்பீங்களா..? ரன்வீரிடம் கோரிக்கை வைக்கும் PETA..
பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக கொண்டாடப்படும் ரன்வீர் கடந்த சில நாட்களாகவே தனது நிர்வாண போஸ்டரால் எழுந்த சர்ச்சைகளின் நாயகராகியுள்ளார்.
பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக கொண்டாடப்படும் ரன்வீர் கடந்த சில நாட்களாகவே தனது நிர்வாண போஸ்டரால் எழுந்த சர்ச்சைகளின் நாயகராகியுள்ளார்.
நிர்வாண புகைப்பட சர்ச்சை ஓரளவு ஓயத் தொடங்கிய நிலையில் தான் பத்த வச்சுட்டுயே பறட்ட ஸ்டைலில் கொளுத்திப் போடுள்ளது பீட்டா. அதாங்க விலங்குகள் நல அமைப்பு.
ரன்வீருக்கு கடிதம்:
பீட்டா இந்தியா அமைப்பு ரன்வீர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், "நாங்கள் உங்களுடைய நிர்வாண புகைப்படங்களைப் பார்த்தோம். நீங்கள் எங்களுக்காக ஒருமுறை உங்கள் பேன்ட்டுகளுக்கு விடை கொடுத்து நிர்வாண போஸ் தருவீர்கள் என்று நம்புகிறோம். பீட்டா இந்தியா விளம்பரத்தில், எல்லா விலங்குகளுக்கும் ஒரே மாதிரியான உறுப்புகள் தான் உள்ளன. வேகன் ஆக முயற்சி செய்யுங்கள் என்ற டேக்லைனுடன் தோன்றுவீர்கள். இதற்கு முன்னர் இதே கோட்பாட்டை ஆதரித்து நடிகை பமீலா ஆண்டர்சன் எங்களுக்காக ஒரு புகைபடம் கொடுத்தார். நீங்களும் அதுபோல் தருவீர்கள் என நம்புகிறோம். பமீலாவின் புகைப்படத்தை உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம்" என்று கோரப்பட்டுள்ளது.
அறிமுகமே அசத்தல்:
ரன்வீர் சிங் இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானவர். பாலிவுட்டின் அசைக்க முடியாத நட்சத்திரங்களுள் ஒருவர். ரன்வீர் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சிறு வயதிலேயே மேடை நாடகம் , பள்ளி விழாக்கள் என நடிப்பு மீது அதீத ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார். சினிமா மீது அதீத ஈடுபாடு கொண்டதால் தனது கெரியரை பாலிவுட் நோக்கி திருப்பினார். 2010 ஆம் ஆண்டு வெளியான பேண்ட் பாஜா பாரத் Band Baaja Baaraat எனும் திரைப்படம் மூலம் அறிமுகமனார். அனுஷ்கா ஷர்மாவிற்கு ஜோடியாக நடித்த ரன்வீருக்கு முதல் படமே கம்ர்ஷியல் ஹிட்டானது. நகைச்சுவை காதல் படமான அந்த படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தியதால் , அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதும் ரன்வீர் சிங்குக்கு கிடைத்தது.
ரன்வீர் சிங் கடந்த 2013 முதல் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலில் இருந்த ஜோடிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அதனை அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும். உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவதுதான் ரன்வீரின் ஸ்டைல். ஆடைகளுக்கு பெயர் போன அவர் ஆடை இல்லாமலும் பிரபலமாகியிருக்கிறார். ஏற்கெனவே கொடுத்த நிர்வாண போஸ் சர்ச்சையே ஓயாத நிலையில் இப்போது பீட்டா எழுதியுள்ள கடிதம் மீண்டும் பிரச்சனைக்கு உயிர் கொடுத்துள்ளது.