Ranjithame Song Hit: 5 கோடி பார்வையாளர்களை எட்டிய வாரிசு ரஞ்சிதமே பாடல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
‘வாரிசு’ படத்தில் இருந்து வெளியாகியுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் 5 கோடி பார்வையாளர்களை எட்டியுள்ளது.

‘வாரிசு’ படத்தில் இருந்து வெளியாகியுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் 5 கோடி பார்வையாளர்களை எட்டியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
View this post on Instagram
2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி இன்னும் சில 2 மாதங்களே இருப்பதால் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க போவது நிச்சயம். அந்த வகையில் தீபாவளிக்கு வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புது போஸ்டர் வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 3 அன்று வாரிசு படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் நடிகர் விஜய் தான் இப்பாடலை பாடியுள்ளார். ரஞ்சிதமே பாடல் கடந்த நவம்பர் 5 வெளியானது. இதன் வரிகள் மட்டுமல்லாமல் பாடலின் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஒரு புறம் விஜய்யின் ரஞ்சிதமே பாடலை ரசிகர்கள் வைப் செய்து வரும் நிலையில், இன்னொரு புறம் பாடலின் வீடியோவை பழைய பாடல்களுடன் இணைத்து பதிவிட்டு கலாய்த்து தள்ளி சம்பவங்களும் நடந்தது. இதற்கு அந்தப்பாடலை எழுதிய பாடலாசிரியர், விவேக்கும் விளக்கம் அளித்திருந்தார். விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்தாலும், இன்னொரு பக்கம் பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. இந்த வரவேற்பை கொண்டாடும் வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் வாரிசு ரஞ்சிதமே பாடல் 5 கோடி பார்வையாளர்களை எட்டியதோடு, 15 லட்சம் லைக்குகளையும் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டு, பாடலுக்கு ரசிகர்கள் ஆடிய ரீல்ஸ்களையும் அதில் இணைத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

