Rani Mukerji About Kamalhaasan | ”கமல்ஹாசன் சொன்ன வார்த்தைதான் வாழ்க்கையையே மாத்துச்சு” - பாலிவுட் நடிகை ஓப்பன் டாக்
பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பிரபல நடிகை ராணி முகர்ஜி தனது வாழ்கையை கமல் கூறிய வார்த்தைகள்தான் மாற்றியது என கூறியுள்ளார்.
ராணி முகர்ஜி திரையுலத்திற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் அவர் இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், “ நான் நடிகையாக மாறுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. என் அம்மாதான் என்னை நடிகையாக மாற்ற வேண்டும் என்று நினைத்தார். அவரின் வற்புறுத்தல் காரணமாகவே முதல் படத்தில் நான் நடித்தேன். நாயகியாக நடிக்க எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. எனது குரல், உயரம் உள்ளிட்டவை ஒரு கதாநாயகி எப்படி இருக்கக் கூடாதோ அப்படி இருந்தது.
ஸ்ரீதேவி, மாதுரி, ஜூஹி மற்றும் ரேகா மாதிரியான மூத்த நடிகைகளை பார்த்து நான் வளர்ந்தேன். திரைப்பட நடிகையாக எனது பயணம் ஆரம்பித்ததும் நிறைய உச்ச நட்சத்திரங்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்படி நடிக்கும் போது கமல்ஹாசன் ஒரு என்னிடம், “ உங்கள் உயரத்தை வைத்து உங்களை அளவிட முடியாது, தொழில் ரீதியாக உங்களை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்கிறீர்கள் என்பதை பொருத்துதான் நீங்கள் அடையும் உயரம் மற்றும் வெற்றி இருக்கும் என்றார். அவரைப் போல பல நட்சத்திரங்கள் எனக்கு ஊக்கம் அளித்தனர். இது போன்ற வார்த்தைகள்தான் என்னை திரைத்துறையில் தொடர்ந்து நிலைக்க வைத்தது. அதன் பின்னர் வழக்கமாக நாயகிகள் கடைப்பிடிக்கிற அனைத்து மரபுகளையும் உடைத்தேன்” என்றார்.
16 வயதில் இருந்து நடித்து வரும், ராணி முகர்ஜி கமல்ஹாசனுடன் ' ஹே ராம்' படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
View this post on Instagram
மேலும் படிக்க:
Kaduvetti Guru Son | 5 போலீஸாரால் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது - காடுவெட்டி குரு மகன் பகிரங்க மிரட்டல்..#Kanalarasan #KaduvettiGuru #Jaibhim #Suryahttps://t.co/6UbsP0NyZH
— ABP Nadu (@abpnadu) November 20, 2021