மேலும் அறிய
Ramayana Glimpse : 835 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணா முன்னோட்டு வெளியானது
Ramayana Glimpse : நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் , சாய் பல்லவி நடித்துள்ள 'ராமாயணா'' படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது

ராமாயணா , ரன்பீர் கபூர் , சாய் பல்லவி
Source : Twitter
ராமாயணா க்ளிம்ப்ஸ்
ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தின் இயக்குநர் தற்போது இதிகாச கதையான ராமாயணத்தை படமாக்கியுள்ளார். ரன்பீர் கபூர் இதில் ராமர் கதாபாத்திரத்திலும் சாய் பல்லவி சீதையாக நடித்துள்ளார். கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் ராவணனனாக நடித்துள்ளார். சன்னி தியோல் அனுமன் வேடத்திலும் ரவி துபே லட்சுமணன் வேடத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசைகலைஞர் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக சுமார் ரூ 835 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது ராமாயணா திரைப்படம் . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















