Animal First Single: நடுவானில் விமானத்தில் முத்தம்.. ரன்பீர் - ராஷ்மிகாவின் கெமிஸ்ட்ரி.. அனிமல் முதல் பாடல் அப்டேட்!
ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள அனிமல் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.
அனிமல்
அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அனிமல்’. தெலுங்கு, தமிழ் , இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம் சந்தீப் ரெட்டி வங்காவிற்கு பாலிவுட்டில் இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.
தற்போது ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனாவை வைத்து இவர் இயக்கியிருக்கும் திரைப்படம் அனிமல். அனிமல் படத்தின் அறிவிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானதில் இருந்து இந்தப் படத்துகாக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்து வருகிறார்கள்.
ரன்பீர் கபூரின் புதிய அவதாரம்
பர்ஃபி, ஏ ஜவானி ஹேய் தீவானி, ராக்ஸ்டார், தமாஷா மாதிரியா சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படங்களில் நடித்த ரன்பீர் கபூரை நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஒரு புதிய கதாபாத்திரத்தில் பார்க்க ஆவலாக இருந்து வரும் நிலையில், அனிமல் படத்தில் அவரது லுக் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ஒரு சிறிய முன்னோட்ட வீடியோ வெளியாகியது. உணர்ச்சிகரமான ஒரு ஆக்ஷன் திரைப்படமாக அனிமல் படம் இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்த வீடியோ கொடுத்தது.
ராஷ்மிகா மந்தனா
கன்னடம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ராஷ்மிகா மந்தனா, இந்தப் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இந்தப் படத்தில் கீதாஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சமீபத்தில் அனிமல் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது. நிஜ வாழ்க்கையில் துருதுருவென்று அதிகம் பேசியபடி வலம் வரும் ராஷ்மிகா, இந்தப் போஸ்டரில் சத்தம் போட்டு கூட பேசத் தெரியாத வெட்கப்படும் ஒருவராக தோற்றமளித்தார்.
அனிமல் டீசர்
தொடர்ந்து, அனிமல் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த டீசரில் ரன்பீர் கபூர் எந்த மாதிரியான ஒரு சூழலில் வளர்கிறார், அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையிலான உறவு எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது. அவருக்கும் அவரது மனைவியான கீதாஞ்சலிக்கு இடையிலான உறவு எப்படி மோதிக் கொள்கிறது, தன்னுடைய தந்தையின் வளர்ப்பினால் தான் எப்படி இவ்வளவுப் பெரிய கேங்க்ஸ்டராக மாறுகிறார் என, அனிமல் படம் கதை என்ன மாதிரியானதாக இருக்கும் என்பதைப் பற்றி ஓரளவிற்கு நமக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது.
முதல் பாடல்
#AnimalTheFilm pic.twitter.com/oI3ko5YnEz
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) October 10, 2023
இந்நிலையில் அனிமல் திரைப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியில் ’ஹுவா மே’ என்கிற இந்தப் பாடல் தமிழ் , தெலுங்கு , மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. அர்ஜூன் ரெட்டி படத்தில் புல்லட்டில் சென்றுகொண்டே கதாநாயகனும் கதாநாயகியும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி ரக்கர்ட் லவ்வர்ஸ் மத்தியில் டிரெண்டானது போல், இந்த பாடலின் போஸ்டரில் நடு ஆகாயத்தில் விமானத்தில் வைத்து ரன்பீர் மற்றும் ராஷ்மிகா மந்தனா முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இதனால் இந்தப் பாடல் மீதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.