மேலும் அறிய
பொங்கலுக்குப் பிறகுதான் தெரியும் யார் எந்தப் பக்கம்! - திமுக கூட்டணி கலகலத்துவிட்டது: நயினார் நாகேந்திரன் அதிரடி
ஆட்சி வருவதற்கு முன்பாக பழைய ஓய்வுதியத்தை தருவோம் என கூறுகின்றீர்களே, ஆனால் ஐந்து ஆண்டு முடிய போகிற நேரத்தில் அறிவித்துள்ளீர்கள்!

நயினார் நாகேந்திரன் - பாஜக மாநில தலைவர்
Source : ABP NADU
விழுப்புரம் : ஆட்சி முடியும் தருவாயில் ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார் என்றும் மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் என்ன ஏமாளியா, திமுக கூட்டணி கலகலப்பு போய்யுள்ளது, பொங்கல் பண்டிகைக்கு பிறகுதான் எந்தெந்த கட்சிகள் எங்கே இருக்கிறது என தெரியும் என திண்டிவனத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேச்சு:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காந்தி சிலை பகுதியில் பாஜகவின் சார்பில் தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன் கலந்து கொண்ட பரப்பரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாஜகவின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்.
எழுச்சி பயணத்தின் 52 வது நாள் இன்று. நாளை 53வது நாளில் பயணம் நிறைவடையுள்ள தருவாயில் நாளைய தினம் உள்துறை அமைச்சர் திருச்சி வந்து புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் புனித பயணம் புதுக்கோட்டையில் இருந்து தொடங்குகிறது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் எத்தனையோ கூட்டணி வந்து சேரும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார். நானும் எடப்பாடி.பழனிசாமியும் மருது சகோதர்களாக பணியாற்றிய காலம் உண்டு. மீண்டும் இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. அதிமுகவில் உள்ள அனைவரும் எல்லோரும் என் நண்பர்கள். ஆனால் சிவி.சண்முகம் என்னுடைய சகோதரர். எல்லா தொகுதியும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள். மயிலம் தொகுதி தான் நம்மை வாழ்விக்கும் தொகுதியாக உள்ளது.
ஆட்சிக்கு வரும்போது மின் கட்டனம், வரியை உயர்த்தமாட்டோம் என கூறினார்கள். ஆனால் மின் கட்டனத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. மோடியை கொலை செய்வேன் என திமுகவினர் கூறினார்கள் ஆனால் நடவடிக்கை இல்லை. ஆனால் சவுக்கு சங்கரை வீடு புகுந்து கைது செய்தனர். பள்ளி, கல்லூரி வாசலில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. பாலியல் வன்கொடுமை 52 சதவீதம் கூடியுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. போதை பழக்கத்தால் வட இந்தியர்களை தாக்கி வருகிறார்கள். ஆட்சி வருவதற்கு முன்பாக பழைய ஓய்வுதியத்தை தருவோம் என கூறுகின்றீர்களே, ஆனால் ஐந்து ஆண்டு முடிய போகிற நேரத்தில் அறிவித்துள்ளீர்கள். பார்க்கின்ற மக்களும், அதிகாரிகளும் ஏமாளிகளா?. என்றைக்கு அரசாணை பிறப்பிக்கப் போகிறீர்கள். திமுக கூட்டணி கலகலத்துப் போய்யுள்ளது.
காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் கேட்கிறது. விடுதலை சிறுத்தை கட்சி வேண்டா வெறுப்பாக இருப்பதாக கூறியுள்ளார்கள். பொங்கல் முடிந்தால் தான் தெரியும் யார், யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியும். இந்த ஆட்சி மாற வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர வேண்டும். அப்போதுதான் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே மாநில ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நிதிகளை தர முடியும். 14 லட்சம் கோடி மற்றும் 11 மருத்துவக் கல்லூரிகள் இபிஎஸ் ஆட்சி காலத்தில் வந்துள்ளது. கொடுத்தது மோடி. காசி தமிழ்ச் சங்கம் நடத்தியது பிரதமர் மோடி. எல்லா இடங்களிலும் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்கிற தாரக மந்திரத்தை சொல்பவர் மோடி. துணை குடியரசுத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி.ராதாகிருஷ்ணன் அவர்களை நியமித்துள்ளார். நயினார் நாகேந்திரன் அல்லது சிவி.சண்முகம் உருவாக்கி கூட்டணி அல்ல.
மோடியும், எடப்பாடி.பழனிச்சாமியும் உருவாக்கிய கூட்டணி. அதிமுக எம்ஜிஆ-ரால் உருவாக்கப்பட்ட அற்புதமான இயக்கம். அமெரிக்க அதிபராக இருந்தாலும், ரஷ்ய அதிபராக இருந்தாலும் எல்லோரும் நரேந்திர மோடியிடம் கேட்டு பேசுகிறது காலத்தில் நாடு உருவாக்கியுள்ளது. வல்லரசு நாடாக மாறி வருகிறது. திமுக ஓட்டுக்கு 3000ஆயிரம் கொடுப்பதற்காக பணத்தை பதிக்க வைத்துள்ளார்கள். செந்தில் பாலாஜி ஒரு கிராம் தங்கம் கொடுக்கப்போவதாக கூறுகிறார்கள். எனவே திமுக ஆட்சியை அகற்ற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















